பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வணிகவியல் அகராதி


A


abandonment – கைவிடல்: காப்புறுதி முறிக்குட்பட்ட உரிமையை வேண்டா மென்று விட்டுவிடல். இது கடல் துறைக்காப்புறுதியில் அடிக்கடி நடைபெறுவது. சரக்குக்கப்பல் நீரில் மூழ்கும்பொழுது இச்செயல் மேற்கொள்ளப்படும். இதனால் இதற்குரிய இழப்புத் தொகை காப்புறுதி செய்தவருக்குக் கிடைக்கும்.

abatement – தள்ளுபடி: வணிகப் பேரத்தில் பட்டியல் தொகையில் செய்யும் தள்ளுபடி.

abbreviation – சுருக்கம்: ஒரு சொல்லைச் சுருக்கி எழுதுதல். எ-டு. நக. நடப்புக் கணக்கு.

abnormal gain – அளவுக்கு மேற்பட்ட ஆதாயம்: வாணிபத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய இலாபம்.

abnormal loss – அளவுக்கு மேற்பட்ட இழப்பு: வாணிபத்தில் ஏற்படும் அளவுக்கு மீறிய இழப்பு.

above the line – கோட்டுக்கு மேல்: 1) ஒரு நிறுவனத்தின் ஆதாய இழப்புக் கணக்கினைக் கிடைமட்டக் கோட்டுக்கு மேலுள்ள பதிவுகளாகக் காட்டுவது. 2) விளம்பரச் செலவினைக் காட்டுவது. 3) ஒரு நாட்டு வருவாய்த் தொடர்பான நடவடிக்கைகளைக் குறிப்பது. ஒ. below the line.

absorption – ஈர்ப்பு அமைப்பு: நிறுமங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் மூன்று தன்மைகளுள் ஒன்று. ஏனைய இரண்டு இணைப்பு அமைப்பு, புறமறு அமைப்பு.

absorption costing – அடக்கச் செலவு: ஆகுஞ் செலவு. ஒரு விளைபொருளை உண்டாக்கு வதிலுள்ள மொத்தச் செலவு. இச்செலவை உறுதி செய்த பின்னரே, விற்கும் விலையை உறுதி செய்ய வேண்டும். ஒ. marginal cost.

acceptance by post – அஞ்சல் வழி ஏற்பு: அஞ்சல் மூலம் ஒப்புகை பெறுதல்

acceptance of bill – உண்டியல் ஏற்பு: அளிக்கப்படும் மாற்றுச் சீட்டை வாங்கி ஏற்றுக் கொள்ளுதல்.

acceptance - ஏற்பு: மாற்றுச் சீட்டிலுள்ள ஒப்பம். இதன் நிபந்தனைகளை இதனைப் பெறுபவர் ஏற்றுக் கொள்கிறார் என்பது பொருள். "ஏற்றுக் கொள்ளப்பட்டதும் இன்ன ஊரில் கொடுக்கப்பட வேண்டியது" என்று எழுதப் படுவது. 2) ஏற்றுக்கொள்ளப்-