பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

acc

5

adv


ஐந்தொகையில் பொறுப்பாகக்காட்டப் பெறும்.

a. profits - தொகுஆதாயங்கள்: ஆதாயக் கணக்கு ஒதுக்கீட்டில் காட்டப்படும் தொகை. வரி, பங்கு ஈவு, காப்பு நிதி முதலியவற்றிற்கு வழிவகை செய்தபின், அடுத்த ஆண்டுக் கணக்கிற்குக் கொண்டு செல்லப்படுபவை.

accumulating shares – தொகுபங்குகள்: ஒரு நிறுமத்தின் சாதாரண பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் பொதுப் பங்குகள். இவை பங்கு வீத மல்ல. இவற்றிற்கு வருமான வரி இல்லை.

acknowledgement – ஒப்புகை: ஒப்புக் கொண்டு அளிக்கும் சீட்டு. எ-டு. பணவிடை ஒப்புகை

acquisition – கையகமாக்கம்: வணிகத்தைக் கையகப்படுத்தல். ஒரு நிறுமம் முன்னரே நடந்து கொண்டிருக்கும் கூட்டு நிறுவனத்தையோ நிறுமத்தையோ வாங்குதல் வணிகக் கையகமாக்கம் எனப்படும்.

a. accounting – கையகமாக்கம் கணக்கு வைப்பு: ஒரு நிறுமத்தை மற்றொரு நிறுமம் எடுத்துக் கொள்ளும்பொழுது மேற்கொள்ளப்படும் கணக்கு வைப்பு முறைகள்.

actuals - மெய்யீடுகள்: இயற்புகள். வாங்கக் கூடியதும் பயன்படுத்தக் கூடியதுமான பொருள்கள். பா. Spot goods.

address-முகவரி: ஒருவர் இருப்பிட விவரம்.

adjudication – தீர்ப்பு: நொடிப்பு நடவடிக்கைகளில் நீதிமன்றம் வழங்கும் முடிவு.

adjustment - சரிக்கட்டல்: கணக்குப் பதிவு நடவடிக்கை.

adjustment entries - சரிக்கட்டுப்பதிவுகள்: இலாப நட்டத்தைத் துல்லியமாக உணர, ஆண்டிறுதியில் இவை சில கணக்குகளில் செய்யப்படுபவை. எந்திரமாக இருப்பின், வாங்கிய விலையைக் காட்டாது, அதிலிருந்து தேய்மானத்தைக் கழித்துப் பதிவைச் சரி செய்ய வேண்டும்.

advance - முன்பணம்: சில்லரைச் செலவுக்காகக் கொடுக்கப்படும் முன்தொகை.

advertising – விளம்பர செய்தல்: அறிவிக்கவும் கவரவும் செய்யப்படும் தொடர்பு. எ-டு. செய்தித்தாள், தொலைக் காட்சி விளம்பரங்கள் வணிக வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.

advertising media – விளம்பர ஊடகங்கள்: விளம்பரம் செய்யும் கருவிகள் - செய்தித்தாள், தொலைக்காட்சி.