பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களும் சரியாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழியில் உள்ளது போல ஒவ்வொரு துறைக்கும் தனி அகராதி வெளியிடும் பெரும் திட்டத்தில் இது முதல் நூலாகும். தமிழ் நாட்டில் அண்மைக் காலத்தில் உயர்நிலைப் பள்ளிகளிலும் வணிகவியல் கற்பிக்கப்படுகிறது. மேல்நிலைப்பள்ளிகளில் வணிகவியல் ஒரு பாடமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பி.காம்., எம்.காம், ஆங்கில மொழிவழிப் பயிலும் மாணவர்களில் 60 விழுக்காட்டினர் தமிழ் வழியிலேயே தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அகராதி மிகுந்த பயன் தரும்.

வ்வகராதியை உருவாக்கியவர் தஞ்சையின் புகழ்பெற்ற பள்ளியில் பெருமைமிகு தலைமை ஆசிரியராகத் திகழ்ந்தவர்; பல்துறை அறிவினர்; ஆசிரியர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் சொற்களைத் தொகுத்து வகைப்படுத்திச் சரியான பொருள் எழுதி மிகச் சிறந்த அறிவியல் அகராதியை உருவாக்கியவர். சிறந்த மொழி பெயர்ப்பாளர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழியாக்கம் செய்பவர். செய்வன திருந்தச் செய்யும் செம்மல். பரிசுகள் பல பெற்ற நல்லாசிரியர். இவரின் கடுமையான உழைப்பின் விளைச்சல் இந்நூல்.

10க்கும் மேற்பட்ட அகராதிகளை வெளியிட்ட மணிவாசகர் பதிப்பகம் இந்த அகராதியை பெருமகிழ்வுடன் வெளியிடுகிறது. எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டிற்கு வெளியிடும் சிறப்பு வெளியீடு 10இல் இது 10ஆவது. தமிழ் நாட்டு மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி வணிகவியல் அறிவு பெறுவதோடு வளர்தொழில் வளர்க்கும் தொழில் முனைவராக வருதல் வேண்டும் என்பது பதிப்பகத்தின் வேணவா துறைதோறும் தமிழுக்குத் தொண்டு செய்து நாளும் உயர்வோம்.

-----------