வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 17 மூன்று ரூபாய் என்பதை ரயில்வே ஸ்டேஷனில் ஒட்டப் பட்டிருந்த அறிவிப்பிலிருந்து தெரிந்து கொண்டேன். மதுரையில் உறவினர் ஒருவர் தனியாக ஒரு விடுதி யில் வசித்து,தொழில் பயிற்சி பெற்றுவந்தார். அவரை அணுகி உதவிகோரினேன். அன்று இரவு அவருடனேயே தங்கினேன். அவரிடமிருந்து மூன்று ரூபாய் வாங்கிக் கொண்டு, மறுநாள் காலை ரயிலேறி, காரைக்குடி போய் சேர்ந்தேன். இந்திரா ஆசிரியர் ப. நீலகண்டனை சந்தித் தேன். அவர் அன்புடன் பழகினார். ஆனாலும் உதவி எதுவும் செய்வதற்கில்லை என்று கூறினார். கோவையிலிருந்து ஆர். சண்முகசுந்தரம் காரைக்குடி வந்திருந்தார். அவர் இந்திரா ஆபீசி லேயே தங்கியிருந்தார். மணிக்கொடி'யிலும் மற்றும் சில பத்திரிகைகளிலும் சிறு கதைகள் எழுதிப் பெயர் பெற்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவருடைய முதலாவது நாவல் நாகம்மாள்' வெளி வந்திருக்க வில்லை. - சண்முகசுந்தரம் என்னை சக்தி காரியாலயத் துக்கு அழைத்துப் போய், வை. கோவிந்தன், தி. ஜ. ரங்கநாதன் ஆகியோரிடம் அறிமுகம் செய் தார். எனது கதை ‘சக்தி'யிலும் பிரசுரமாகி யிருந்த தால், என் பெயர் அவர்களுக்கு அறிமுகமானதாகவே இருந்தது. அங்கும் எனக்கு உற்சாகமான வார்த்தைகள் ஏராளமாகக் கிடைத்தன. உருப்படியான உதவி எதுவும் செய்யக் கூடிய நிலையில் சக்தி இருக்க வில்லை.
பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/19
Appearance