உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள திருநெல்வேலிக்கே திரும்பிப் போகும்படி எல் லோரும் யோசனை கூறினார்கள். இதற்குள் என் அண்ணா அசோகன் என்னைப் பற்றி விசாரித்து, நண்பர்களுக்கும் சில பத்திரிகை அலுவலங்களுக்கும் கடிதங்கள் எழுதியிருந்தார். காரைக்குடியில் ஒரு நண்பருக்கும், இந்திரா" ஆபீ சுக்கும் கடிதங்கள் வந்தன. நான் வீட்டுக்கு உடனே திரும்பி வர வேண்டும் என்றும், சென்னைக்கு போக விரும்பினால் ரயில் செலவுக்குப் பணம் அனுப்புவதாக வும் அண்ணா அறிவித்திருந்தார். வீட்டுக்கே திரும்பிச் செல்வது என்றுதான் தீர் மானித்தேன். அண்ணாவிடமிருந்து பணம் வந்ததும் அவ்விதமே செய்தேன். இப்படி முடிந்தது எனது முதலாவது அட் வென்ச்சர் அப்போது எனக்கு வயது 22. இரண்டாவது பாத்திரை வீட்டில் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது ஏதாவது ஒரு பத்திரிகை அலுவலகத் தில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். மதுரையில் சில புதிய பத்திரிகைகள் தோன்றி யிருந்தன. சேலத்திலிருந்து சண்ட மாருதம் என்ற பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அவை சாதாரணப் பத்திரிகைகளாக வெளி வந்தன. அவற்றின் தரத்தை உயர்த்தி, நல்ல இலக் கியப் பத்திரிகையாக வளர்க்கலாம்; அதற்கு நான் உதவ முடியும் என்று கடிதங்கள் எழுதினேன். என் எழுத்துக்களை விஷய தானம்’ ஆகப் பெற்றுப் பிரசுரிக்க அவை தயாராக இருந்தனவே