உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் | 45 கு. ப. ரா. சொல்றாரு. அது உம்மாலே முடியாது. நான் மனசு வச்சா இந்த ஸ்தாபனத்தையே மூடிப் போடுவேன்னு சீதாராம் சொல்றாரு எப்படி இருக்கு பார்த்தீர்களா!' என்று. இரண்டு நாட்களுக்குப் பிறகு துறையூர் வந்த ந. பிச்சமூர்த்தி சொன்னார்: திருச்சி ரேடியோ ஸ்டேஷனில் கு. ப. ரா. வை பார்த்தேன். துறையூ ருக்குப் போன விஷயம் என்ன ஆச்சு என்றேன். ரொம்ப வருத்தமாகப் பேசினான். ஒரு பத்திரி கைக்கு இரண்டு ஆசிரியர்கள் இருப்பது சரியல்ல; அதனால் விபரீதங்களே விளையும்னு புரிந்து கொண் டேன் என்று சொன்னான்...' மனம் முறிந்து கும்பகோணம் சேர்ந்த கு. ப. ரா. வின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் நோய் வாய்ப்பட்டார். தேறவேயில்லை. சில தினங்களிலேயே எதிர்பாராத சேதி வந்தது. 1944 ஏப்ரல் இறுதியில் கு. ப. ரா. இறந்து போனார். உடனே திருலோக சீதாராமும் ரெட்டியாரும் பணத்தை அள்ளிக்கொண்டு அவசரமாகக் கும்ப கோணம் சென்றார்கள். திரும்பி வந்ததும், கு. ப. ரா. வின் அந்திமச் சடங்குகள் சிறப்பாக நடந்து முடிந்தன என்று சொன் னார்கள். கு. ப. ரா. பேரில் நிதி திரட்டி அவர் குடும் பத்துக்கு உதவத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார் கள். அது சம்பந்தமான அறிக்கைகள் அச்சிடப் பட்டன. கி. ஊழியனின் 18வது இதழ் கு. ப. ரா. நினைவு மலராக வந்தது. சென்னை கலைமகள்' பத்திரிகையும் கு. ப. ரா. நினைவு நிதி திரட்டியது.