48 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் கதைகள், கட்டுரைகளுக்குத் தான் தட்டுப்பாடு. தான் வெவ்வேறு விதமாக, அநேக புனை பெயர்களில் எழுதினேன். வசன கவிதைகளும் எழுதினேன். ரெட்டியார் வெவ்வேறு பெயர்களில் கட்டுரைகள் எழுதினார். திருச்சியிலிருந்து சிட்டியும் எழுதி அனுப் பினார். "கிராம ஊழியன் ஆண்டு மலர் தயாரிக்க வேண்டும் என்று சீதாராம் திட்டமிட்டார். கு.ப.ரா. காலத்தில் தயாரான மலர் சாதாரண மாக இருந்தது. ஆண்டு மலர் சிறந்த தயாரிப்பாக 1930களில் வெளிவந்த தினமணி ஆண்டு மலர் போல -அமைய வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். தினமணி மலர்கள் சிறந்த இலக்கியப் பொக்கி ஷங்களாக அமைவது வழக்கம். அவற்றை புதுமைப் பித்தன் உருவாக்கினார். 1934ல் நீண்ட வடிவத்தில் 'தினமணி பாரதி மலர்' என்ற பெயரில் ஒரு மலர் வந்தது. 1937 முதல், வழக்கமான தீபாவளி மலர் சைலில், தினமணி மலர் உருவாயிற்று. கதைகள் கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருக்கும். அவற்றில் 1937-ம் வருட மலர் மிகவும் சிறப் பான இலக்கிய மலர் ஆகும். அதில் புதுமைப்பித்தன் கதை நினைவுப் பாதை’, மெளனியின் எங்கிருந்தோ வந்தான், ந. பிச்சமூர்த்தியின் கவிதை கிளிக்கூண்டு, இளங்கோவன் கட்டுரை சாவே வா’, ச.து.சு. யோகி யார் கவிதை அகல்யா, இலக்கியச் சோவை’ என்ற தலைப்பில் ராஜாமணி உரையாடலாக க. நா. சுப்ரமண்யம் எழுதிய இலக்கிய விஷயம், சிட்டி யின் நான் பிரபலஸ்தனாக இருந்தால்...' என்ற
பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/50
Appearance