முன்னுரை
எண்பதுகளின் ஆரம்பத்தில் நெய்வேலியில் பணியில் அமர்ந்திருந்த நேரம். அதுவரை ஜனரஞ்சக எழுத்துக்களில் ஈர்க்கப்பட்டிருந்த எனக்கு புதிய நண்பர்கள் தொடர்பாலும் தீபம், கணையாழி ஆகிய பத்திரிகைகளின் அறிமுகத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் நவீன இலக்கியத்தின்பால் ஈடுபாடு ஆரம்பித்தது. தீபம் இதழில் அப்போது தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற தொடரை வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிவந்தார். அத்தகைய சிறுபத்திரிகைகள் குறித்தும், தமிழின் நவீன இலக்கியம் குறித்தும் மேலும் விபரமாக அறிந்து கொள்ள அவருடன் தொடர்பு கொண்டேன். அதன் பிறகு கிட்டதட்ட ஐந்து ஆண்டு காலம் வல்லிக்கண்ணன் அவர்களுடன் கடிதத் தொடர்பு வாரம் ஒன்று என்ற அளவில் நீடித்தது. .
புதிய இலக்கிய வாசகனுக்கு இலக்கியம் பற்றி தெளிவான புரிதலை ஏற்படுத்தும், அக்கடிதங்களில் பெரும்பாலானவை பாதுகாப்பாக வைத்திருந்தும் கூட இடம் மாறியதில் கண்டுபிடிக்க முடியாமல் போய் இத் தொகுப்பில் சேர்க்க இயலாமல் ஆகிவிட்டது. தமிழகத்தில் இப்படி வல்லிக் கண்ணன் அவர்களால் உருவாக்கப்பட்ட இலக்கிய வாசகர்கள் எத்தனையோபேர் உள்ளனர். எல்லா சிறுபத்திரிகைகளுக்கும், எல்லா படைப்பாளிகளுக்கும் பாராட்டு கடிதம் எழுதுபவராக வல்விக்கண்ணனை ப விக்கும் ಥಿ - ೭ 2 హౌ இலக்கியவாதிகள் யாருமே இந்த சேவையை புரிந்து கொள்வதில்லை. புதிய இதழாளர்கள், எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அவசியம் என்பதை கருதியே வல்லிக்கண்ணன் அத்தகைய கடிதங்களை எழுதுகிறார். அக்கடிதங்களினூடே குறைகளும் சொல்லப்படுவதுண்டு. இப்படியாக இலக்கிய உலகில் எனக்கு ஞானத் தந்தையான வல்லிக்கண்ணன் அவர்களின் கடிதங்களை தொகுத்து வெளியிட நண்பர் நாகரத்தினம் அவர்கள் முன்வந்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பல்வேறு நண்பர்களுடன் தொடர்பு கொண்டு கடிதம் எழுதி, நேரில் சந்தித்து பெறப்பட்ட கடிதங்கள் ஏராளம். கடிதங்கள் அனைத்தும் எண்பதுகளுக்கு பின் எழுதப்பட்டவையாகவே எங்களுக்குக் கிடைத்தன. தமிழகத்தின் நவீன இலக்கியத்தின் தோற்றம் முதல் ஒரு