வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 23 விட்ட கல்வி அதிகாரி ஒருவர் அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். எச்சரிக்கை விடுத்தார். எனவே, அவர் புதிய பெயர் ஒன்றைத் தேர்ந்துகொள்ளத் துணிந்தார்.
அவருடைய நண்பர் ஒருவர் கூறியபடி பிரேம்சந்த் என்ற பெயரை அவர் சூடிக்கொண்டார். 1909 முதல் இந்தப் பெயரிலேயே அவர் எழுதி வந்தார். முதலில் உருதுவிலும், பிறகு இந்தியிலும் எழுதிப் பிரசுரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர் இந்தியில் எழுதுவதையே முக்கியப் பணியாகவும் கொண்டார்.
அந்நாட்களில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கை நாட்டுமக்களின் உள்ளத்தில் பொங்கி எழுந்து செயல்களில் பரிணமித்துக் கொண்டிருந்தது. தலைவர்கள் அந்த உணர்ச்சியைத் தூண்டி, செயல்திட்டங்கள் கண்டு, போராட்டங்களை நடத்தி வந்தார்கள். பிரேம்சந்தின் உள்ளத்திலும் சுதந்திரக்கனல் ஒளிர்ந்தது.
அவர் எழுதிய முதலாவது சிறுகதையில், பூமியில் மிகவும் மதிப்பு வாய்ந்தது எது என்ற பிரச்சினையை எழுப்பி, விடை அளித்துள்ளார். மரணதண்டனை பெற்ற மகளுக்காக அழுது அரற்றும் ஒரு தந்தையின் கண்ணிருக்கு அந்த மதிப்பு உண்டா? கணவனின் உடலைச் சுட்டெரிக்கிற தீயில் விழுந்து தன்னையும் எரித்துக் கொள்கிற மனைவியின் சாம்பலுக்கு அத்ததைய மதிப்பு உண்டா? இல்லவே இல்லை. நாட்டின் விடுதலைக்காகப் போராடி உயிர் துறக்கும் வீரனின் கடைசித்துளி ரத்தமே மிக மிக மதிப்பு வாய்ந்தது என்றார் பிரேம்சந்த்.
சுதந்திர தாகம் கொண்டிருந்த இந்தப் பேனா வீரர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அடிமை உத்தியோகத்தில்தான் கழித்தார். வாழ்க்கை முரண்களில் இதுவும் ஒன்று.
சர்க்கார் பள்ளிக்கூட ஆசிரியர் வேலையை விட்டுவிட வேண்டும் என்று அவர் அநேக சந்தர்ப்பங்களில் எண்ணியது உண்டு. ஆனால் குடும்பநிலைமையும் பொருளாதாரத் தேவை களும் அதற்கு இடம் அளிக்கவில்லை.
ஆனாலும், தேசிய விடுதலை எழுச்சி நாட்டில் மேலோங்கி வளர்ந்த காலக்கட்டத்தில், பிரிட்டிஷ் சில்லரை தேவதைகளின் அதிகாரக்கெடுபிடிகள் பிடிக்காமல் போனநிலையில் பிரேம்சந்த் அரசாங்க வேலையை உதறி எறியத்தான் செய்தார். பிறகு, தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்தார்.
அக்காலகட்டத்தில் அவர் எழுதிய கதைகளும், நாவல்களும் கிராமங்களில் நீடித்த பரிதாபகரமான வாழ்க்கை நிலைகளைச் சித்திரித்தன. நாட்டுமக்களின் சோகங்களை, வறுமையை, வெறுமையை வீறுகொண்டெழுந்த நாட்டினரின் போராட்ட