உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சம் 11


 பண்ணையார் அவரை ஒரு தினுசாகப் பார்த்தார். தனிரகச் சிரிப்பு ஒன்று உதித்தார். அந்தப் பார்வைக்கும் சிரிப்புக்கும் என்ன பொருள் உண்டு என்பது எல்லலைக்குநாதருக்குப் புரியவில்லை. ஆனால், அவர் உள் ளத்திலே ஒரு பதைப்பு பிறக்கது. அர்த்தமற்ற, தெளிவற்ற, காரணமற்ற, ஒரு அரிப்பு-வேதனையில்லா ஒரு வகைக் குழப்பம் -அவர் உள்ளத்தில் சுழன்றது.

மோட்டார் சைக்கிளை வேகமாக உதைத்து முடுக்கி விட்டு ஏறினார் எல்லையா பிள்ளை.

'உங்க நன்மைக்குத்தான் சொன்னேன். ஒரு காள் நம்ம வீட்டுக்கு வாங்க, பண்ணையார்வாள் ” என்று கத்தியபடியே, வாகனத்துக்கு இயக்கம் கொடுத்தார் அவர். ஓடிய மோட்டார் பைக்கின் ஒலிக்கு இயைந்தாற்போன்ற கனைப்புச் சிரிப்பு சிந்தி நின்றார் ஒண்டியாப் புலி.

“என் நன்மைக்காகச் சொல்கிறானாம்-மடையன்!” என்று உறுமியது அவர் உள்ளம்.


Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.ல்லைக்குநாத பிள்ளை பண்ணையாரைச் சந்தித்து விட்டு வந்ததற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு,இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு ஒரு வண்டி நிறைய விறகு வந்தது. பண்ணையார் அனுப்பி வைத்தார்’ என்றான் வண்டிக்காரன்.

"வீடு தெரியாமல் வந்துவிட்டே போலிருக்கே! பண்ணையார் வீட்டிலே கொண்டு போய் இறக்கு” என்று கண்டிப்பாகச் சொல்லி, விறகு வண்டியைத் திருப்பி அனுப்பி விட்டார் இன்ஸ்பெக்டர்.

மறு நாளே வந்து சேர்த்தார் ஒண்டிப்புலி.