உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 வஞ்சம்



வளர்ச்சி :

ன்ஸ்பெக்டர் எல்லைக்குகாத பிள்ளை இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு ஈஸிச்சேரில் சாய்ந்து கிடந்தார். வீட்டின் முன்வாசல் கிண்ணையை ஒட்டிய தரைப்பகுதியில் பிரப்பத் தட்டிகளில் 'சாய்ப்பு' இறக்கி உட்கார வசதிப்படுத்தப்பட்ட இடம் அது. எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கும்.

அன்றிரவு அவர் பண்ணையார் ஒண்டிப்புலியா பிள்ளையைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தார். அவர் மனம் தெம்பாகச் சிரித்தது.

“எஹ்! பண்ணையார் எல்லாரையும் போல என்னையும் எண்ணிக் கொண்டார்னு தோணுது. எல்லைக்கியா பிள்ளை குணம் என்னதுன்னு தெரியும்படி செய்யாமலா போவேன்........"

தன் நினைப்பின் தடத்திலே சுகநடை போட்ட மனம் தந்த இனிமையில் சொக்கியிருந்த இன்ஸ்பெக்டரைத் திடுக்கிட வைத்தது ""ஐயய்யோ! காலை மேலே தூக்குங்க.நாற்காலி மேலே துக்கி வையுங்க" என்ற அபாய அலறல்.

அவரது மனைவிதான் அப்படிக் கத்தினாள், சடக்கென்று காலை உயர்த்திக் கொண்ட பிறகுதான், "ஏன், என்ன விஷயம்?" என்று கேட்கத் தோன்றியது அவருக்கு. அதே வேளையில் அவர் பார்வை தரை மீது பதிந்தது.

அங்கே, அதோ, கறுப்பாக - வெகு வேகமாக - கோரத்தின் தனிஉருப் போல - ஓடுவது என்ன?.

அவர் உடம்பிலே புல்லரிப்பு பிறந்தது.