உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

   தண்டமுனை அடியின் மூலம் நேராக இலக்கினுள் அதை செலுத்தி வெற்றி எண் பெற முடியும். ஆனால் பந்து இலக்கினுள் நுழைவதற்கு முன்.தாக்கும் குழு ஆட்டக்காரர் ஒருவரது கோலில் பட்டுச் சென்றால்தான் பற்றி எண்ணாகும் என்பதையும் இந்த நேரத்தில் மறந்து விடாமல்,நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
   இதிலும், தடுக்கும் குழுவினரும் தாக்கும் குழுவினரும் தவறிழைத்தால், மீண்டும் தண்டமுனை அடி அடுக்குமாறு நடுவர் ஆனையிடுவார். 
   வேண்டுமென்றே தடுக்கும் குழுவினர் இவ்விதியை மீறினால் ‘ஒறுநிலை அடி’ தண்டனையாக அவர்களுக்குத் தரப்படும். தாக்கும் குழுவினர் தவறிழைத்தால், தடுக்கும் குழுவினர் ‘தனி அடி’ அடித்து ஆட்டத்தை மீண்டும்தொடங்குவர்.
   குறிப்பு: முனை அடியின் மூலமாகவே இலக்கினுள் பந்தை எளிதாக அடித்து வெற்றி எண் பெற முடியும். அதனை எல்லா ஆட்டக்காரா்களுமே நன்குணர்ந்திருக்கின்றனர்.
   இதனால், தாக்கி ஆடும் குழுவின் முயற்சியைத் அடுத்து தரைமட்டமாக்கிவிட தடுக்கும் குழுவினர் பல யுக்திகளை மேற்கொண்டு ஆடுவார்கள். ஆகவே தாக்கும் குழுவினர் தயாராக இருந்து ஆடவேண்டியதன் வரும் முறைகளைப் பிழையறக் கற்று ஆடினால், பரிதும் பயன் தரும். 
    முனை அடி அடித்து பந்து அடிக்கும் வட்டத்திற்குள் வந்ததும், அங்கு நிற்கும் தாக்கும் குழுவினாில்.ஒருவர், பந்தை நிலையாக, அசைவில்லாமல், நிறுத்தி வைக்க வேண்டும். அருகில் நிற்கும் இன்னொரு ஆட்டக்-