உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

காரர், பந்தை விரைவாக இலக்கிற்குள் அடித்து வேண்டும்.

பந்தினைக் கையாலும் பிடித்து நிறுத்தலாம் கோலாலும் தடுத்து நிறுத்தலாம். என்றாலும் பந்தை அசைவில்லாமல் நிற்கவேண்டும்.

அதற்குள் தடுக்கும் குழுவினர் பாய்ந்தோடி வந்தடை செய்ய முயல்வார்கள். ஆகவே, இதனை செயப்படுத்த எத்தகைய விரைவும் எவ்வளவு சீாிய ஆற்றலும் தேவை என்பதை தாக்கும் குழு ஆட்டக்காரா்கள் உணரவேண்டும்.

ஒருவரே தடுக்கவும், தடுத்து பின் அடிக்கவும் முடியாது. இவ்வளவு குறுகிய காலத்திற்குள் ஆடிவிளையாட முடியாது என்பதால் தான். இந்த திறன் நுணுக்கத்தைத் திறமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற சற்று விரிவாகக் கூற வேண்டியிருக்கிறது.

தண்டமுனை அடி எடுத்து ஆடும்பொழுது முக்கியமாக தாக்கும் குழுவில் பங்கு பெறுபவர் மூன்று போ்களாவார்கள்.

கடைக் கோட்டிலிருந்து பந்தை அடிப்பவா்கள் அடிக்கும் வட்டக் கோட்டினருகில் நின்று பந்தைபிடித்து நிறுத்துபவர், நிறுத்திய பந்தை வலிமையாக இலக்கினுள் அடித்துச் செலுத்துபவர்.

முதலாமவர் பந்தை மிக மெதுவாகவோ, வலிமை நிறைந்த கடுமையாகவோ அடிக்காமலும், இரண்டாமவர் பந்தை நழுவ விடாமல், அசையவிடாமல் பிடித்தும், மூன்றாமவர் தோளுக்குமேல் கோலை உயர்த்தாமலும் அடித்து ஆட வேண்டும்.