5 விரும்பத் தொடங்கியவுடனே, உண்மை நிலையினை புரிந்து கொள்ளும் தன்மையிலே மனம் புகுந்து கொள்ளும். புரிந்து கொண்ட நினைவுகளுக்குள்ளே, அன்ருட அனுபவங் கள், ஆழ்ந்த அறிவினைச் சொரிந்துகொண்ட்டே போகும்ன. தேர்ந்த திறன் நுணுக்கங்கள், தெளிவு கொண்ட விளையாட்டு முறைகள், சேர்ந்தாடும் சிந்தனைகள்-செயல் படுத்தும் இங்கிதங்கள் எல்லாம் இளைய தல்லை முறையை மேம் படுத்தும். வழி நடத்தும். அத்தகைய ஓர் அரிய மனநிலையை, விளையாட்டினை விரும்பத் தகுந்த குண நிலையை உண்டாக்கும் என் ஆசையின் முதிர்ச்சியால்தான், வளைகோல் பந்தாட்டம் எனும் எனது நூல் உருவாகியிருக்கிறது. விளையாட்டின் வரலாறு, பாரதத்திற்கு விளையாட்டின் தொடர்பு, எத்தகையோர் விளையாட்டில் பங்கு பெற வேண்டும், அவர்கள் தகுதிக்கு ஏற்ப தேர்ந்தெடுத்தாடும் இடங்கள் (Position), அவ்வாறு விளையாட வரும் ஆட்டக்காரர்கள் ஆட வேவண்டிய முறைகள் அனைத்தையும் தெளிவாகச் சொல்லி யிருக்கிறேன். என் முயற்சி ஓர் வடிவம் பெற்றிருக்கிறது. இளைஞர்களுக் குரிய முயற்சிகள் நல்ல படிவம் பெற வேண்டும். அது மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர்கள், விளையாட்டுத்துறை பொறுப்பாள்ர்கள், அதிகாரிகள் கையிலே இருக்கிறது. விளையாட்டுத்துறை இலக்கியத்தில், இது எனது 20ஆவது நூலாகும். எனது நூல்களை அழகரக அச்சிட்டுத் தருகின்ற கண்பர் M.S. மணி அவர்களுக்கும், முகப்பு வண்ண் ஒவியத்தை எழிலாக வடித்துத் தந்திருக்கும் ந்ண்பர் ஆனந்த்ன் அவர் களுக்கும், திரு. சாக்ரடீசுக்கும் எனது நன்றி. எனது நூல்களை ஆதரித்து அன்பு காட்டும். தமிழறிஞர் உலகம், இதனையும் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். ஞானமலர் இல்லம் சென்னை-17 } எஸ். நவராஜ் செல்லையா
பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/6
Appearance