உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4. பிறகுதான் குறட்பா சொல்லுவேன். திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அவ்வளவு விரைவில் விளங்கிவிடக் கூடியதா?” என்ன அண்ணா அந்த நீதி? சொல்லுகிறேன், தம்பி! உன்னிப்பாகக் கேட்க வேண்டும். நாம் பேசுகிற பேச்சில், இரண்டு வகையான சொற்கள் உண்டு. தெரிகிறதா?” என்ன அண்ணா அந்த இரண்டு வகை? 'நல்ல சொற்கள் ஒரு வகை; கெட்ட சோற்கள் மற் றொரு வகை. அதாவது, மற்றவர்களுக்கும் தனக்கும் இன்பத்தினைக் கொடுக்கும் சொற்கள் ஒரு வகை, துன்பத் தினைக் கொடுக்கும் சொற்கள் மற்றொரு வகை. இந்த இரண்டு வகை சொற்களில், எந்த மாதிரியான சொற்களை நீ விரும்புகிறாய் தம்பி! சொல் பார்ப்போம்? இதைக் கூடவா அண்ணா கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்! நல்ல சொற்களைப் பேசத் தான் எல்லோரும் விரும்புவார்கள். நானும் இளிமையான நல்ல சொற்களைச் சொல்லத்தான் விரும்புவேன்’. தம்பி! அது சரிதான்! அந்தப் பையன்களைப் பார்த்தா யல்லவா? அவர்கள் காய்களைத்தானே தின்று கொண் டிருந்தார்கள்!’ ஆம், அண்ணா, காய்களைத்தான் தின்று கொண்டி ருந்தார்கள்.” இப்போது, உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் தம்பி! ஏன் அவர்கள் பழங்களைச் சாப்பிடவில்லை? எனக்கும் வியப்பாகத்தான் அண்ணா இருக்கின்றது. பழங்களைச் சாப்பிட்டு இன்பத்தை அடையலாம். பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். இனிமையாக இருக்கும். காய் களைத் தின்றுகொண்டு அவர்கள் முகத்தைக்கூட வேதனை ாகக் காட்டி துன்பத்தையும் அடைந்தார்களே!