உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37

‘ஆம் அண்ணா! ஏராளமாகத் தெரிந்துகொள்ளவேண் டியது இருக்கும் போல் இருக்கின்றதே! நல்ல ஏமாற்று வேலை கற்றுக்கொண்டிருக்கும் போல் தோன்றுகிறதே இந்தக் கொக்கு." ‘நமக்குத்தான் தம்பி அனேக நேரங்களில் ஒன்றும் தெரிந்துகொள்ள முடிவதில்லை. தம்பி! இவைகள் எவ்வ ளவோ சாமர்த்தியமாக இருக்கின்றன. சரி, தம்பி! இந்தக் கொக்கு அடிக்கடி தண்ணிரில் கொத்திக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? அதனுடைய மூக்கு தேய்ந்துபோகும் அண்ணா! அத னால்தான் அடிக்கடி கொத்தாமல் இருக்கிறது என்று நினைக்கின்றேன்.” அதுவல்ல தம்பி உண்மை. அடிக்கடி கொத்திக்கொண் டிருந்தால், மீன்கள் எச்சரிக்கையாக இருந்துவிடுமே! பிறகு ஒரு மீன் கூட அதன் அருகில் வராதே! இன்னொன்றுகூட தெரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கொக்கு அங்கு இருப் பதே அந்த மீன்களுக்குத் தெரியக்கூடாதாம்! ஆகையினால் தான் சேத்தது போலவே நிற்கிறது. இன்னொரு பெரிய உண்மையும் இருக்கிறது!’ அது என்ன அண்ணா! அந்தப் பெரிய உண்மை!’ அதுவா சொல்லுகிறேன். கொக்கு தான் தின்பதற்கு நல்ல மீனாகத்தானே விரும்பும். அப்படிப்பட்ட மீன் அடிக்கடி கரையோரமாக வராது. அது வரும் வரையில் உன்னிப்பாகக் காத்துக்கொண்டே பொறுமையாக அவசர மில்லாமல் குறிப்பாகப் பார்த்துக்கொண்டே நிற்கும்.” ! எவ்வளவு பெரிய உண்மை விளங்கிவிட்டது அண்ணா! நேரத்தையும், சமயத்தையும் நன்றாகப் புரிந்துவைத்திருக் கிறதே இந்தக் கொக்கு. காலம் வரும் வரையில் காத்துக் கொண்டே இருக்கிறதே!’ .