இதனால் எல்லாம், அது போன்ற நாவல்களை அவசியம் படிக்க வேண்டும் என்ற ஆசைக்கனல் ஒவ்வொரு வாலிபனுள்ளும் உயிர்த்துக் கொண்டிருந்த காலம் அது.
ஆசையைத் தூண்டும் நாவல்கள் இல்லாமலா போயின? வடுவூர் துரைசாமி அய்யங்காரே டஜன் கணக்கில் எழுதி வெளியிட்டிருந்தாரே!
'வெண்கலச் சிலை அல்லது கன்னியின் முத்தம்’ (ரெயினால்ட்ஸின் தி பிரான்ஸ் ஸ்டேச்சு ஆர் தி விர்ஜின் கிஸ்’ தழுவல்), காளிங்கராயன் கோட்டை ரகசியங்கள், கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியாரின் துப்பறியும் லீலைகள்' -இப்படிப் பல,
அவை எல்லாம் அந்த நகரத்தின் முனிசிபல் வாசக சாலையில் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து வந்து படிக்கிற உரிமை கிளார்க்காக அங்கே சேர்ந்திருந்த இளைஞனுக்கு இருந்தது. அந்த உரிமையைப் பயன்படுத்த அவன் தயங்கவில்லை.
அவனுடைய நண்பர்கள் அனைவரும் அத்தனை புத்தகங்களையும் படிக்க ஆசைப்பட்டார்கள். அதற்கான
சுலப வழி தான் அவர்கள் கையாண்டது.
நண்பர்களில் ஒருவன் வீட்டில் எந்தவிதமான கட்டுப்பாடும் இருந்ததில்லை. அப்படி கண்டிப்பதற்கு அப்பாவோ, விவரம் தெரிந்த கார்டியன் எவருமோ இல்லை, அம்மா இருந்தாள் - பையன்கள் மீது அவளுக்கு நம்பிக்கை. அவர்கள் நல்லவர்கள்; தப்பான காரியம்
எதுவும் செய்ய மாட்டார்கள் என்று.
வாசகர்களும் விமர்சகர்களும் 3