உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii


கோலத்துக்கூத்தாகும் இது. பெண் தன்மை மிகுந்து ஆண் தன்மை குறைந்தவனைப் பேடி என்கிறது நாலடியார்.

புராண இதிகாச காலங்களிலிருந்தே அலிகளும் பேடிகளும் இருந்துள்ளனர். அரவான், அர்ச்சுனன் மற்றும் பேடியோடு கலவியில் ஈடுபட்ட கண்ணன், பேடிக்கூத்து ஆடிய மன்மதன் எனப் பட்டியல் நீளும்.

அலிகள் வீரஞ்செறிந்தவர்களாக வாழ முடியும் என்பதற்கு வரலாற்றுச் சான்றாக இருந்தவன் மாலிக்காபூர்!

இவ்வாறு கடவுள் முதல் மனிதர்வரை அலிகள்பற்றிய வாழ்க்கை அவ்வப்போது புராண இதிகாச வரலாற்று நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ளது. ஷேக்ஸ்பியரது நாடகங் கள் ஒருசிலவற்றில் அலிகள் நாடக மாந்தராகியுள்ளனர்.

நம் தமிழ் இலக்கியத்துள்ளும் அலிகள் வாழ்க்கை யைச் சிலர், குறுநாவலாகவும், கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர். எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் இப்புதினம் அலிகள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினமாகும். இந் நாவலில், சுயம்புவை ‘வாடாமல்லி'யாகக் காட்டுகிறார். குடும்ப வாழ்க்கை, பொதுவாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என்ற மூன்றிலுமாக அழுந்தி வாடி வதங்கிய சுயம்புவை ‘வாடாமல்லியாக வழங்கியுள்ளார்.

சுயம்புவிடம், பத்துவயது முதலே காணப்பட்ட இயல்பு, பொறியியல் கல்லூரிக்குப் போன புதிதில் அவன் தன்னை உணர்ந்த நிலை, பின் அவனுள் இருக்கும் ஏதோ ஒருணர்வு-அவன் தனியே இனங் குறிக்கப்படல்-பேருந்தில் செல்லும்போது, கல்லூரி கலாட்டாவின்போது கிராம மக்களின் பார்வையில் படும்போது, குடும்பத்தில் சகோதரி திருமணத்தின்போது, காவல்காரர்களின் கண்ணில் படும்போது - இப்படிச் சென்ற இடங்களில் எல்லாம் அவனது பண்பைக் காட்டுவதாக இருப்பது எது? என்பதை

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/19&oldid=1248947" இலிருந்து மீள்விக்கப்பட்டது