உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 7


போகிறார்கள் என்பதுபோல் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களின் கண்களுக்கு மட்டும் பேசும் சக்தி யிருந்தால் அவன் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவளின் காதில், இன்னுமா தூக்கம்?. இதுக்குமா தூக்கம்? என்று கத்தி யிருப்பார்கள். ஒரு நடுத்தர ஜோடியின் வாட்டசாட்டமான ஆண் பிறவி, தனது மனைவியைப் பார்த்து ‘அங்கே பாரு. சொல்லி வச்சு தனித்தனியா பஸ்ல ஏறி, இப்போ ஒண்ணா உட்கார்ந்து உரசிக்கிட்டு’ என்று அவர்களைப் பார்த்தபடியே பேசினார். மனைவி அவரது கண்களைத் திருப்புவதற்காக, தலைமுடியைப் பிடித்திழுத்தாள், பிறகு ‘நீங்கள் செய்யாததா? என்றாள். அப்புறம் உதட்டைக் கடித்துக் கொண்டே, ‘நாம் செய்யாததா? என்று தன் பேச்சு சாசனத்திற்குத் தானே ஒரு திருத்தம் கொண்டு வந்தபோது

ஜன்னல் கம்பிகளில் முகம் போட்டுக் கிடந்த அந்தப் பெண், ஏதோ ஒரு வாடை பட்டு அதை உணர்ந்தவள் போல் கண் விழித்தாள். பக்கத்தில் இருப்பவனை ‘அண்ணனோ என்பதுமாதிரி கண்களைக் கசக்கிப் பார்த்தாள். பிறகு அவன்’ இல்லை என்று அறிந்ததும், சட்டென்று எழுந்தாள். அப்படியும் அசைவற்று இருக்கும் அவனைப் பார்த்துவிட்டு, இந்த அநியாயத்தைப் பார்க்க யாரும் இல்லையா என்பதுபோல், சுற்றுமுற்றும் பார்த்தாள். பிறகு பின்பக்கமாய்த் திரும்பி, எண்ணா. எண்ணா என்று கத்தினாள். அந்தப் பேருந்தின் கடைமடை இருக்கையில் துள்ளித் துள்ளி விழுந்தும், துளக்கம் கலையாமல் கிடந்தவன், எத்தனையோ சத்தங்களுக்கு ஈடு கொடுத்தவன், இப்போது அலறியடித்து எழுந்தான். இதற்குள் அவளும் அந்த இடத்தை விட்டு, அவசர அவசரமாக வெளியே வரப் போனாள். ஆனால், அவனோ, இரண்டு கால்களையும் முன்னிருக்கையின் முதுகில் குவித்து வைத்துக்கொண்டு, அவளுக்கு வழியடைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/29&oldid=1248781" இலிருந்து மீள்விக்கப்பட்டது