உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சு. சமுத்திரம்


தான், பதினைந்து நாட்களுக்கு முன்பு வந்த, தம்பி சுயம்பு, மாப்பிள்ளை ஊர் வழியாய்ப் போய் பையனைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனான். ‘எக்கா, மாப்பிள்ளை மட்டும் எனக்குப் பிடிக்கலன்னா, இந்தக் கலியாணத்தையே நடத்த விடமாட்டேன். நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி விட்டுப் போனவன் இதோ திரும்பியிருக்கான்.

மரகதம், தம்பியைப் பார்த்து நாணத்துடன் சிரித் தாள். காதுகள் நிமிர தலை கவிழ்ந்து நின்று அவன் பக்க மாக, கண்களை மட்டும் உயர்த்தினாள். அப்படியும் அவன் பதில் பேசாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு நிமிர்ந்தாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவள் முகம், சுழிப்பானது; சுண்டிப்போனது. கால்கள் தம்பியை நோக்கித் தாமாய் நகர்ந்தன. என்ன கோலம் இது? முகத்தில் ரத்தக்கீறல்கள்; வாயில் ரத்தச் சிதைவுகள், மரகதம் பதறினாள்.

“தம்பி. தம்பி. என்னடா ஆச்சு? என்னடா ஆச்சு?”

வயதளவில் நான்கு ஆண்டுகள் இடையில் நின்றாலும், உறவளவில் முப்பதாண்டு இடைவெளி கொடுக்கும் தாய் மாதிரியான அக்காவைப் பார்த்ததும், சுயம்புவால் தாளமுடியவில்லை. அவள்மேல் காலற்றவன்போல் சாய்ந்தான். இதனால் நிலை தடுமாறிப் போன மரகதம், வேப்ப மரத்துணைப் பிடித்து, தன்னைச் சரிக்கட்டிக் கொண்டபோது, அவன் அக்காவின் கழுத்தைக் கட்டிப் பிடித்து அவள் தலைக்குமேல் தன் தலையைப் போட்டு, ‘அக்கா. அக்கா என்று அரற்றினான். அந்த ஒரே வார்த்தையில், தனது உடல், பொருள், உயிர், அத்தனையும் வைத்திருப்பதுபோல் ஓலமிட்டான். ஆரம்பத்தில் செய்வதறியாது திக்குமுக்காடிய மரகதம், தன்னை, மனத்தாலும் நிலைப்படுத்திக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/44&oldid=1248872" இலிருந்து மீள்விக்கப்பட்டது