உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

எஸ். பாலசுப்ரமணியன்
ஆசிரியர்: ஆனந்தவிகடன்

காலம் காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வரும் பிரிவில் ஒன்றான அலிகளை மையமாக வைத்து விகடனில் ஒரு நாவல் எழுத திரு. சு. சமுத்திரம் விருப்பம் தெரிவித்தபோது உடனே சம்மதம் தெரிவித்தேன். காரணம், மிகவும் பரிதாபத்துக்குரிய இவர்கள் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் இன்னல்களும், துயரங்களும் ஒரு நாவல் மூலமாக வாசகர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பம்தான்.

எதிர்பார்த்தது போலவே விகடனில் ‘வாடா மல்லி’ தொடர் வெளியானபோது வாசகர்களின் பாராட்டுக்களை அது ஏகமனதாகப் பெற்றது. சுயம்புவின் கதாபாத்திரம், வாசகர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வெவ்வேறு சூழ்நிலைகளில் சுயம்பு சந்திக்க நேரிட்ட கஷ்டங்களும், அவமானங்களும் படிப்பவர்களின் மனம் கசிய வைத்தது.

எடுத்துக்கொண்ட கருவை மேலோட்டமாக விரிவுபடுத்தி எழுதாமல் அதன் உள்ளே புகுந்து, புறப்பட்டு வந்திருக்கிறார் சு. சமுத்திரம். இதற்காக நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். நிறைய பேரை சந்தித்திருக்கிறார். நாவலாசிரியரின் அந்த உண்மையான உழைப்பு நல்ல பலன் அளித்திருக்கிறது என்பதற்கு நாவல் பெற்ற வெற்றியே சாட்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/5&oldid=1249185" இலிருந்து மீள்விக்கப்பட்டது