உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

歌 வாழ்க்கைச் சுவடுகள் ஆகும். பிறமொழிகளில் அண்ணல் க்ாந்தியடிகள், பண்டிதநேரு, இராசேந்திரபிரசாத், ஏ.கே. கோபாலன், விரேசலிங்கம்பந்துலு, தாகூர், புத்ததேவ் பாக, காகா கலேல்கர், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், சிவராமகரந்த், தகழி சிவசங்கரம்பிள்ளை ஆகியோரின் தன்வரலாற்று நூல்கள் குறிப்பிடத்தக்கன. புகழ்பெற்ற எழுத்தாளரும், குறிக்கோள் வாழ்க்கை உடையவருமான எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள் தம் வாழ்வனுபவத்தை மிகச் கவையாகவும் எளிய நடையிலும் வாழ்க்கைச் சுவடுகள் என்னும் தலைப்பில் நமக்கு அரிய நூலாக ஆக்கித் தந்திருக்கின்றார். வாழ்க்கை விதவிதமான அனுபவங்களைப் பெற்று விளங்குவது. விதம்விதமான மனிதர்களை அறிமுகம் செய்து வைப்பது. ஒரு கண நேரம் நாம் நம் வாழ்க்கையில் நடந்து வந்த பாதையைத் திரும்பி நோக்கினால் நாம் தினகத்து நிற்போம். இவ்வளவு பேரையா நாம் சந்தித்து வந்திருக்கின்றோம்? இவ்வளவு அனுபவங்கள் நம்முடைய வாழ்வில் நிகழ்ந்தேறியுள்ளனவா? என்று வியந்து நிற்போம். எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள் தம் வாழ்க்கைச் சுவடுகளை இந்நூலில் பதிந்து வைத்துள்ளதைக் காணும்போது அவர்தம் மெல்லிய உடலில் மறைந்து விளங்கும் உள்ளத்திண்மையும், உறுதியான முயற்சிகளும் புலனாகின்றன. வாழ்வில் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் எழுத்தாளராய் அரிய படைப்புகளைப் படைக்கும் இலக்கிய நெஞ்சத்தினராய் வாழ வேண்டும் என்னும் குறிக்கோளை அவர் கொண்டிருந்தது புலனாகின்றது. வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? என்னும் மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள் அவருடைய வாழ்வின் உந்து சக்தியாய் விளங்கின. 'எனது இளம்பிராயத்தில் இருந்தே என்னுள் மந்திரம் போல் ஒலித்துக் கொண்டிருந்தன. இவ்வரிகள். நாட்களை வீணாக்காமல் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உள் உந்துதல் என்னை இயக்கியது. என்கின்றார் வல்லிக்கண்ணன். எனவே குறிக்கோளோடு வாழ்ந்த அவர் திண்ணிய நெஞ்சத்தை அவர்தம் வாழ்வு முழுவதும் காணமுடிகின்றது. தனிமையும், நூல்கள் படிப்பதும் அவருக்கு விருப்பமானவை. கதைகளிடையேயும், புத்தகங்களிடையேயும் இன்னும் வாழ்ந்து வருகின்றவர் வல்லிக்கண்ணன். அவர்தம் இல்லச்சூழல் இயல்பாகவே அவர்தம் நூல் ஆர்வத்திற்குத் துணை நின்றது. ஏறத்தாழ அறுபது வருடங்களாக எழுதிவரும் எண்பது வயது இளைஞர் திரு வல்லிக்கண்ணன் அவர்கள். எழுபத்திரண்டு நூல்களுக்கும் மேல் எழுதிய எழுத்தாளர் ஆம். அவருக்கு எழுத்தும் எழுதுகோலும்தான் தெய்வம் போலும்! தமிழ்நாட்டின் இதழியல் வரலாற்றைத் தொகுத்து