இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
iv
மான செயல் மட்டுமல்ல போற்றத் தகுந்த காரியமும் ஆகும். அவர்களுக்கு என் வாழ்த்தும் வணக்கமும் உரியன.
இப்புத்தகத்தில் விஜயலக்ஷ்மி முதலியவர்களை 'அள்' விகுதியிட்டே குறித்திருக்கிறேன். பெண்ணை 'அவள்' என்பது கௌரவ குறையாகாது. 'அர்' விகுதி போட்டு பேசிவிடுவதால் மட்டுமே பெண்களை கௌரவித்தது ஆகிவிடாது. கவி பாரதியார் கருத்தும் இதுதான். அன்னிபெசன்டை 'அவள்' என்று குறிப்பிட்டு வந்தார் அவர். ஒருசமயம் யாரோ அதை ஆட்சேபித்து 'அவள்- இவள்' என்று சொல்லக்கூடாது என்று குறிப்பிடவும், பாரதியார் வெகுண்டார். உணர்ச்சியோடு 'அன்னிபெசன்ட்- அவள், அவள், அவள்தான். பெண்ணை அவள் என்று சொல்வோம் என்றார்'.
பாரதி வரலாற்றில் காணப்படும் இந்த சம்பவத்தையே, இப்புத்தகத்தில் காணும் பிரயோகத்தை ஆட்சேபிக்கக் கூடியவர்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சென்னை | வல்லிக்கண்ணன் |
16, மார்ச் 1954 |