உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

எடுக்கும் அதிகாரம் நடுவர்க்கு வழங்கப்பட்டிருப்பதைத் தான் இந்தச் சொல் குறிக்கின்றது.

8.     மிகை நேரம் (Extra Time)

கால்பந்தாட்டத்தின் மொத்த ஆட்டநேரம் 90 நிமிடங்களாகும். அதாவது ஒரு பருவத்திற்கு (Half) 45 நிமிடங்கள் என 2 பருவங்கள் ஆட வேண்டும். பருவ நேரத்திற்கு இடையில் 5 நிமிடங்கள் இடைவேளை.

இவ்வாறு 90 நிமிடங்கள் ஆடியும், இரு குழுக்களும் சமமான வெற்றி எண்கள் எடுத்திருந்தாலும் அல்லது வெற்றி எண்களே எடுக்காமல் இருந்தாலும் மிகைநேரம் மூலமாக ஆட்டம் தொடரப்படுகின்றது.

ஆட்ட நேர முடிவிற்குப் பிறகு, மிகைநேர ஆட்டம் தொடங்குவதற்கு இடையில் உள்ள இடைவேளை நேரம், நடுவரால் தான் தீர்மானிக்கப்படும்.

மிகைநேரப்பகுதியில் ஆட்டத்தைத் தொடங்கிவைக்க, மீண்டும் நாணயத்தைச் சுண்டியெறிந்து, அதன் மூலம் உதை அல்லது இலக்கு இவற்றில் எது வேண்டும் என்பது குழுத் தலைவர்கள் முடிவு தெரிவிக்க, ஆடும் நேரத்தை இருசமபகுதி யாகப் பிரித்துக்கொள்ள, ஆட்டம் தொடங்கும்.

9.     முறையோடு இடித்தாடல் (Fair Charge)

எதிராட்டக்காரரிடமிருக்கும் பந்தை தன் வசம் கொள்வதற்காக, எதிராளியை சமநிலை இழக்கச் செய்து அவரிடமிருந்து பந்தைப் பெறுவதுதான், இந்த முறையாகும்.

அவ்வாறு எதிராளியை இடித்தாடுகின்ற முறையானது, திராட்டக்காரரின் தோள்களுடன் தோள்களாக, இணையாக