22
இணைக்கப்பட வேண்டும். இதற்கு இடையில் ஏற்படுகின்ற பரப்பே ஒறுநிலைப் பரப்பாகும்.
பரப்பின் பயன்கள் :
1 . ஒன்பது குற்றங்களில் ஏதாவது ஒன்றைத் தடுக்கும் குழுவினர் இப்பகுதியில் செய்தால் ஒறுநிலை உதை (Penalty Kick) எனும் தண்டனையைப் பெறுவர்.
2. கைகளினால் பந்தைப் பிடிக்கலாம் என்று இலக்குக் காவலனுக்காக ஒரு விதி, அப் பரப்பில் மட்டுமே இருக்கிறது.
3. ஒறுநிலை உதை எடுக்கப்படும் பொழுது, தடுக்கின்ற இலக்குக் காவலன், உதைக்கின்ற ஆட்டக்காரர் ஆகிய இருவரைத் தவிர, மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் இப்பரப்பிற்கு வெளியிலே தான் நிற்க வேண்டும். -
4. குறியுதை (Goal Kick) எடுக்கப்படும் பொழுது, தடுக்கும் குழுவினரைத் தவிர, மற்ற தாக்கும் குழு ஆட்டக் காரர்கள் அனைவரும் இப்பரப்பிற்கு வெளியே தான் நின்று கொண்டிருக்க வேண்டும்.
26. ஒறுநிலை வளைவு (Penalty Arc)
ஒறுநிலை வளைவு என்பது ஒறுநிலைப் புள்ளியில் இருந்து 10 கெஜ ஆரத்தில் வரையப்பட்ட கால் வட்டப் பகுதியாகும். இது ஆடுகளத்தினுள்ளே ஒறுநிலைப்பரப்பிற்கு வெளியே இருக்கும் பகுதியாகும்.
இது ஒது நிலைப்பரப்பின் ஒரு பகுதி அல்ல என்றாலும் ஒறு நிலை உதை எடுக்கப்படுகின்ற நேரத்தில் ஒறுநிலைப் புள் வரியிலிருந்து 10 கெஜ துரத்திற்கு அப்பால் எல்லா