உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


ஆட்டக்காரர்களும் நின்று கொண்டிருக்க வேண்டும் என்ற எல்லையை சுட்டிக் காட்டவே இந்த வளைவுப் பகுதி பயன்படுகிறது.

27. ஒறுநிலை உதை (Penalty Kick)

தடுக்கும் குழுவினரில் யாரேனும் ஒருவர் தங்களது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே வேண்டுமென்றே தடுக்கப்பட்ட ஒன்பது குற்றங்களில் ஏதாவது ஒன்றைச் செய்தால், அதற்குத் தண்டனையாக, எதிர்க் கழுவினருக்கும் 'ஒறுநிலை உதை' வாய்ப்பு வழங்கப்படும். ஆட்டநேரத்தில் அந்த நேரத்தில் பந்து எந்த நிலையில் இருந்தது என்பதைப் பற்றி கவலைப்படாமல், நடுவர் ஒறுநிலை உதை எடுக்கின்ற தண்டனையை அளிப்பார்.

ஒறுநிலை உதை எடுக்கப்படும் முறை

1. ஒறுநிலைப் புள்ளியில் பந்தை வைத்துத் தான் ஒறுநிலை உதை எடுக்கப்பட வேண்டும்.

2. அப்பொழுது, பந்தை உதைக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரர், அதைத் தடுக்க இருக்கின்ற தடுக்கும் குழு இலக்குக் காவலர் இவர்கள் இருவரைத் தவிர, மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே அதாவது, 10 கெச தூரத்திற்கு அப்பால் போய் நிற்க வேண்டும்.

3. பந்து எத்தப்படுகின்ற நேரம் வரை, இலக்குக் கம்பங்களுக்கு இடையே கடைக் கோட்டின் மேல் நின்று கொண்டிருக்கும் இலக்குக் காவலன், தன்னுடைய கால்களை அசைக்காமல் நிற்க வேண்டும் ,

4. பந்தை உதைக்கும் ஆட்டக்காரர் முன்புறம் நோக்கியே பந்தை உதைக்க வேண்டும்.