இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. தரைக்கு மேலாகப் பந்தாடல் (Air Dribble)
தரைக்கும் கைக்குமாக பந்தைத் தட்டி பந்துடன் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே, மேலாகப் பந்தை எறிந்து, அது தரையினைத் தொடுவதற்கு முன், பத்தைப் பிடித்து விளையாடும் முறை.
2. ஆட்டத்தில் உள்ள பந்து (Alive Ball)
ஆட்ட நேரத்தில் ஆட்டக்காரர்களால், ஆடுகளத்திற்குள்ளேயே ஆடப்படும் பந்து. அதாவது நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகு அவரது கையிலிருந்து வழங்கப்படும் பந்து, ஆட்டத்தில் உள்ள பந்து என்று கருதப்படும்.
3.பின் பலகை (Back Board)
பத்தடி உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இலக்கான இரும்பு வளையத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் பின்புறத் தளமான பகுதி இது. இரும்பால் அல்லது பலகையால் அல்லது கண்ணாடி இழையால் அல்லது மற்றும் ஏதாவது ஒரு