ஆட்டத் தொடக்கத்திலிருந்து இடைவேளை நேரம் வரை உள்ளது முதல் பருவம். இதற்கு 20 நிமிடம்.
இடைவேளை முடிந்து தொடங்கி, ஆட்டம் முடியும்வரை உள்ளது இரண்டாம் பருவம், இதற்கு 20 நிமிடம் .
35. பிடி நிலைப் பந்து (Held Ball)
எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இருவர், ஒரு கையால் அல்லது இரு கைகளால் வலிமையாகப் பந்தைப் பிடித்துக் கொண்டு இழுத்துத் தங்கள் வசமாக்க முயலுகின்ற நிலையே பிடி நிலைப் பந்து எனப்படுகிறது.
அல்லது, முக அருகாமையில் எதிராட்டக் காரர்களால் சுற்றிச் சூழப்பட்டிருக்கும் ஒரு ஆட்டக்காரர், யாருக்கும் பந்தை கொடுக்காமல் அல்லது வழங்காமல், தானே 5 வினாடிகளுக்கு மேல் வைத்திருப்பதையும் 'பிடி நிலைப் பந்து' என்று கூறப்படும்.
இதற்குப் பிறகு, பந்துக்காகத் தாவல் எனும் விதிமுறைப் படி மீண்டும் ஆட்டம் தொடரும்.
36. ஆள் மீது மோதுதல் அல்லது ஆளைப் பிடித்தல் (Holding)
ஒரு ஆட்டக்காரர் எதிராட்டக்காரருடன் மோதி உடல் தொடர்பு கொள்வதுடன். அவரது சுயேச்சையான முன்னேறும் முறைக்கும் பங்கம் விளைவிக்கும் செயலாகும்.
அதாவது, நிற்கக் கூடாத இடத்திலிருந்து கொண்டு, பந்தைத் தடுக்க அல்லது எடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் ஏற்படும் மோதலே ஆளைப்பிடித்தல் எனும் தவறினை கொடுக்கிறது.
வி. க. அ-3