உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


கிடையிலும், வட்டங்களுக்கிடையேயும், மாவட்டம், மாநிலம் என்ற அளவிலும் நடைபெறும்.

எனவே, பள்ளியில் நடைபெறுகின்ற விழா என்றே கூறுவதால், இனி கூறப்போகின்ற விதிகள், வழிமுறைகள் அனைத்தும், எல்லா வகையினரும் நடத்துகின்ற விளையாட்டுவிழாவுக்கும் பொருந்தும்.

பள்ளியில் நடைபெறுகின்ற விளையாட்டு விழாவினை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, 'பொதுக்குழு அல்லது 'விளையாட்டு விழாக் குழு’ என அமைக்கின்றனர். இந்தப் பொதுக் குழுவே விழா வெற்றிகரமாக நடைபெறத் திட்டமிடுகிறது, தீர்மானிக்கிறது, செயல்படுகிறது.

பொறுப்பேற்ற பொதுக்குனழு (Games committee), தனது அங்கத்தினர்களைப் பல குழுக்களாகப் பிரித்து செயல்படத் துண்டுகிறது. விளம்பரக் குழு; பந்தயத்திடல் பராமரிப்புக் குழு; பார்வையாளர் களுக்கென இடவசதிக் குழு; அதிகாரிகளை நியமிக் கும் குழு; நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும் குழு எனப் பிரிந்து தனித் தனியாகத் தமக்கென பகுக்கப்பட்டிருக்கும் பணியினை செவ்வையாகச் செய்யத் தொடங்கும்.

இது போன்ற குழுக்களை அமைத்து, அங்கத் தினர்களை செயல்படத் துண்டும் நோக்கம், எல்லா காரியங்களையும் எல்லோரும் செய்யலாம்’ என்ற முறையிலே போனால், சமையற்காரர் பலர் சேர்ந்து சாப்பாட்டைக் கெடுத்தக் கதை' போல, அரை குறையாகவோ அல்லது ஆரம்பிக்கப்படாமலோ