உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா 15

 நின்று விடவும்; யார் எதைச் செய்வது என்ற நிலை புரியாமலே, எல்லோரும் செயலற்றுப் போகவும் காரணமாகி விடும் என்பதற்காகவே, பொறுப்பைக் கொடுத்து, அவர்களை சுறுசுறுப்புடனும் தன்னம் பிக்கையுடனும் ஆக்க வேலைகளை அழகாகச் செய்து முடிக்கத் தூண்டுவதேயாகும்.

ஒவ்வொருவரும் தங்களது வீட்டுக் காரியத்தைப் போலவே, பொறுப்புடனும் கடமையுடனும் மனப் பூர்வமாக ஈடுபட்டால்தான், விழா வெற்றி பெறும்.

பொதுக்குழுவின் பணி (Games Committee) வியைாட்டு விழாவினை நடத்துகின்ற தேதியை முதலில் தெரிந்து விழாவை (தங்களுக்கென்று ஆடுகளம் Play ground) இருந்தாலும் அதிலே வைத்துக் கொள்ளலாம்) எந்த ஆடுகளத்தில் வைப்பது என் பதை தேர்ந்தெடுத்து பந்தய நாளில் நடத்துகின்ற உடலாண்மைப் போட்டி விதி முறைகளையும் அமைத்து, அங்கத்தினர்களைப் பல குழுக்களாகப் பிரித்து பொதுக் குழு தன் விழாப் பணியைத் தொடங்கி வைக்கிறது.

1. விளம்பரக்க குழு (Publicity commitee) விழா பற்றிய செய்தியனைத்தையும் பொது மக்களுக்கும், போட்டியில் கலந்து கொள்ளவிருக் கின்ற சம்பந்தப்பட்ட (பள்ளிகள், கல்லூரிகள், நிறு வனங்களில் உள்ள) உடலாளர்களுக்கும் அறிவிக்கின்ற பொறுப்பு விளம்பரக் குழுவைச் சேர்ந்ததாகும்.