உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


விழாச் செய்தியினை அன்றாட செய்தித் தாள் களின் மூலம் வெளியிடலாம்.

தங்களது நோக்கத்யுைம் குறிக்கோளையும் அழகாக அச்சிட்டு, அந்தப் பிரதிகளைக் குறிப்பிட்ட வர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

அவ்வாறு அனுப்பும்பொழுது, அச்சிடுகின்ற முறையில் ஒரு சிலவற்றை ஆராய்ந்து அனுசரிக்க வேண்டும்.

விழா நடக்கும் நாள், நடைபெறும் இடம், விழாவை நடத்த இருப்போரின் முகவரி, அவர்கள் நடத்த இருக்கின்ற பந்தய விழாவில் உள்ள முக்கிய மான போட்டி நிகழ்ச்சிகள், போட்டியிலே கலந்து கொள்வோருக்குரிய தகுதிகள், விதி முறைகள், வெற்றி பெறுதற்கான' வெற்றி' எண் முறைகள் (Points) வெற்றி பெறுவோருக்குத் தரக்கூடிய பரிசுகள்.

மேலே கூறிய விவரங்கள் அனைத்தையும் தெளிவாகவும், எந்தவித ஐயத்திற்கும் இடமின்றியும் அழகாக அச்சிட்டு, விழா நடக்க இருக்கும் பல நாட்களுக்கு முன்னதாகவே, முறையோடு உரியவர் களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முன்கூட்டியே விழாக் குழுவின் நோக்கத்தை அறிவித்த பிறகு, சேதி அறிந்த (பள்ளிகள்) நிறு வனங்கள் தங்களது பங்கு கொள்கின்ற விருப்பத்தை அறிவிக்கும்.

விருப்பத்தைத் தெரிவித்த நிறுவனங்களுக்கு, அதன் சார்பாக போட்டியிடும் போட்டியாளர்களான