எஸ். நவராஜ் செல்லையா
[]17
உடலாளர்களின் பெயர்களைப் பதிவு செய்து வைக்கின்ற பதிவுத் தாள்களை’ (Entry Forms) அனுப்பி வைக்க வேண்டும்.
அந்த முறையான பதிவுத் தாளில், போட்டிக் குரிய நிகழ்ச்சிகளையும், அவைகளில் பங்கேற்கின்ற உடலாளர்களின் பட்டியலையும் பதிவு செய்வதற் கேற்ற வகையில் இடமிருப்பது போலவும், அதன்கீழ் (நிறுவனத்தின் தலைவர்) தலைமை ஆசிரியர் கையொப்பம் இடுவதற்கு ஏற்ற வகையில் இடவசதி அமைந்திருப்பது போலவும் பதிவுத் தாள் இருக்க வேண்டும்.
இவ்வளவு விவரங்களையும், குறிப்புகளையும் தந்தால் மட்டும் போதாது. முடிந்தவரையில் விழா நடத்துகின்ற நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்ன தாகவே பெயர்ப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்ற வேண்டுகோள் குறிப்பையும் எழுதி அனுப்புவது சிறந்த முறையாகும். அதற்கான காரணமும் உண்டு. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பல இடங்களிலிருந்தும் பட்டியல்கள் வந்தால்தான், வெளியிலிருந்து வருகின்ற பதிவுத் தாள்களில் அடங்கியுள்ள விவரங்களைப் படித்து ஒப்பிட்டுச் சரிபார்த்து வைக்க ஏதுவாக இருக்கும்.
ஒட்டப் பந்தயங்கள், மற்றும் ஏனைய நிகழ்ச்சி களுக்கும் உரிய போட்டியாளர்களின் பெயர்களைத் தொகுத்து எழுதவும்; ஒட்டப் பந்தயங்களுக்கான 'ஒட்ட வரிசை அமைப்பை (Heat) சரிபடுத்தி