உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா

[] 27


உதவும் என்பதால் முன் கூட்டியே மணலைக் கொண்டு வந்து வைத்திருப்பது நல்லது.

2.உயரத் தாண்டல் (High Jump)

உயரத் தாண்டும் போட்டிக்கு உதவுகின்ற இரண்டு கம்பங்கள் போதிய அளவு உயரம் உள்ளனவாக அதாவது 7 அடியிலிருந்து 8 அடி வரை உயரமாக இருத்தல் வேண்டும்.

அங்குலம் அங்குலமாக உயரத்தை ஏற்றிக் கொண்டு போகும் வழக்கம் உள்ளதால், கம்பங்களில் ஆணி நுழைப்பதற்கேற்றவாறு துளையிட்டு வைத்திருக்க வேண்டும். அந்தத் துளைகள் கம்பங்களில் அடியிலிருந்து தொடங்கினால் பள்ளிகளில் நடைபெறும் பந்தயங்களுக்கு வசதியாக இருக்கும்.

தேசிய அளவில் நடக்கும் போட்டிகளுக்குரிய கம்பங்களின் பக்கவாட்டில் குறுக்குக் குச்சியை (Cross Bar) ஏந்த இரு 'தாங்கிகள்’ (Stand) இருக்கும்.

தாண்டிக் குதிக்கும் மணற் பகுதியின் (Pit) பரப்பளவு குறைந்தது 5 மீட்டர் நீளமும் (16' 4) 4 மீட்டர் அகலமும் (13' 1) இருக்க வேண்டும். தாண்டிக் குதிக்க ஓடிவரும் பகுதியின் அளவு குறைந்தது 50 அடியிலிருந்து 573'மாவது இருந்தால் தான் போட்டியிடும் வீரர்களுக்கு மிக வசதியாக இருக்கும். இரண்டு கம்பளங்களுக்கு இடையே வைக்கப் படுகின்ற குறுக்குக் குச்சியின் குறைந்த நீளம் 11.1%”