எஸ். நவராஜ் செல்லையா 酉 45 உணர்ச்சிவசப்பட்டு, விழாவை விருப்பத்துடன் கண்டு களிக்கவும் போன்றதோர் இனிய சூழ் நிலையைத் தோற்றுவிக்கும்.
உடலாளர்களையும் நல்ல முறையில் அமர வைத்தல் விழாவின் வெற்றிக்கு நல்ல அறிகுறியாகும்
விளையாட்டு வீரர்களை மரியாதையுடனும் கெளரவத்துடனும் வரவேற்று, சகல வசதிகளுடன் இடம் தந்து தங்க வைத்தும், போட்டி நிகழ்ச்சிகளிலே பங்கேற்கச் செய்தும் வைத்தால்தான், அவர்கள் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொள் வார்கள். மீண்டும் இது போன்று நீங்கள் நடத்துகின்ற விழாவுக்கும் வருகை தருவார்கள்.
ஆகவே, முதலில் தங்கி ஒய்வெடுத்துக் கொள் கின்ற இடங்களை அமைத்து வைத்திருப்பது நல்ல திட்டமாகும் . அடுத்து, அவர்கள் போட்டி நடக்கும்பொழுது எந்தவிதமான செளகரியங்களுடன் இருந்தால் இனிமையான சூழ்நிலை அமையும் என்பதையும் யோசித்துச் செயல்பட வேண்டும்.
உடலாளர்கள் அடிக்கடி போட்டி நிகழ்ச்சி களுக்கு, பந்தய மைதானத்திற்குள் போகவும் வரவும் போன்ற வகையில் எளிதாக இருப்பதுபோல், அவர்களுக்குரிய கூடாரங்கள் அமைய வேண்டும். அவர்களும் உட்கார்ந்து கொண்டே நடக்கின்ற போட்டி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் படியாகவும், வசதியாக ஒய்வு எடுத்துக் கொள்வதற்கு ஏற்ற