உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

இந்த ரகமான சூழ்நிலைகளினாலும், தூண்டுதல்களினாலும் எழுகிற வேற்றுமைகளுக்காக, உடனடியாக விவாக ரத்து செய்யத் துணிவது விபரீத விளையாட்டேயாகும். மனச்சூடு தணியும் வரை, ஆறப் போட்டு பிரச்சனைக்கு நல்ல முடிவு காண முயல்வதே புத்திசாலித்தனம்

தாம்பத்ய வாழ்வில் அவ்வப்போது சிறு, சிறு சண்டை சச்சரவுகள் எழுவது சகஜம். அவை கல்யாண வாழ்வின் சுவையை அதிகரிக்க உதவுவனவாகவும் அமையும். அதற்காக, இவற்றை பூதாகாரமாக்கி கொடி கட்டிக் கொண்டு, கட்சி கட்டி விலகிப் போகிற அளவுக்கு தம்பதிகளும், உறவினர்களும் பிணக்கை வளர்த்து விடுவதும் வாழ்வின் நிகழ்ச்சிகளாக உள்ளன. இவ்வளவு தூரத்துக்கு வளர்த்தாமல், குறை களைய வேண்டியது பெரியவர்களின் கடமை.

குழந்தை பிறக்கவில்லை என்கிற காரணத்துக்காக, பெண்ணைக் குறை கூறி விலக்கி வைத்து, மகனுக்கு வேறு பெண் பார்த்துக் கல்யாணம் கட்டி வைப்பதும் இன்றைய சமுதாயத்தில் ‘தண்ணீர் பட்ட பாடு’. இக்குறைக்காக ஏதாவது தோஷம் கற்பித்து, விவாக ரத்து செய்யத் துணிந்தாலும் துணியலாம். சிலர். அப்படித் தள்ளி வைக்கும் முன், ஜாதகங்களையும், கோயில்களையும் நம்பி, பெண் மீது மலடி பட்டம் கட்டுவதற்கு பதிலாக, கணவனையும், மனைவியையும் வைத்தியப் பரிசோதனைக்கு உள்ளாக்கி, உண்மையை உணர முயல்வது நல்லது. பெண் மட்டுமே மலடு என்று கொள்வதற்கில்லை. ஆண் மலடாக இருந்தாலும் இருக்கலாம்.

விவாக ரத்து உரிமை தேவைதான். ஆனால், அதைக் கையாள்வதில் அமெரிக்கத்தனம் பிரதிபலிக்கக் கூடாது. விவாக ரத்து இல்லாமல் தீராது எனும் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே, நிலைமையைச் சரிக்கட்டிச்