வீடும் வெளியும் 線 திங்கள் வண்டிக்குள் தள்ளிக் கதவடைத்துக் கொண்டு, அங்கிருந்து சென் ருர்கள். 'இது அக்கிரமம்! மிருகத்தனம்' என்று சில மாணவர்கள் உறுமிஞர்கள். "நாமும் இதை எதிர்ப்போம்!’ என்று துணிந்து முன் வந்தான் ஒரு இளைஞன். "நடராஜன், உன் அப்பா ஒரு போலீஸ்காரர் ஆச்சுதே' என்று கிண்டலாகச் சொன்ஞன் அவன் நண்பன் காந்திமதிநாதன். " உனக்கும் மனச்சாட்சி இருந்தால், அநியாயத்தை எதிர்க்கும் தைரியம் இருந்தால், உங்க அப்பா கடை முன்னுல் நின்று மறியல் செய்யேன்” என்ருன் நடராஜன். காந்திமதிநாதன் தயங்கவில்லை. தனது புத்தகங் களையும், உடம்பில் கிடந்த சில்க் சட்டையையும், எரிந்து கொண்டிருந்த நெருப்பிலே விட்டெறிந்தான். 'வந்தே மாதரம்' என்று உவகைக் குரல் கொடுத்தவாறு, செந்தில் நாயகத்தின் கடைமுன் போய் நின்ருன். மறியல் சுலோகங்களே ஆரவாரித்தான். மற்றும் பலரது கூவலும் அவன் குரலோடு இணைந்தது. 2. சொக்குக் கவிராயர் 'ஒ சொக்கையா, உன் மனசிலே நீ என்ன தான் தினைச்சுக் கிட்டிருக்கிறே? சும்மா பாட்டுப் பாடிக்கிட்டு ஊர்சுற்றித் திரிஞ்சா, வீட்டுப்பாட்டை யாரு கவனிக் கிறதாம்? வெடு வெடுத்தாள் பார்வதி அம்மாள். அவள் அருமை மகன் சொக்கையா கையிலிருந்த 'ஜால்ராவைத் தட்டி ஓசை எழுப்பினன். ஆங்கிலப் பேய்களெல்லாம் ஆ வென்று அலறுது பார்!
பக்கம்:வீடும் வெளியும்.pdf/10
Appearance