உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 35 அதற்குள் நோயாளிகளைக் கவனித்துவிட்டு வந்த டாக்டர் வீடு திரும்பினார். அவர் பார்வை அந்த விளை யாட்டு பொம்மை மேல் சென்றது. உண்மையில் அவள் அழகாக இருந்தாள். அவர் மனநிலை எனக்கு விளங்கியது. விரைவில் எங்கள் பேச்சை முடித்துக் கொண்டு என் ஸ்கூட்டரை மிதித்தேன். பின்னால் வானம்பாடி ஒட்டிக் கொண்டான். 'இன்றைய பேச்சு உண்மையில் ரொம்பவும் பயன் உடையது' என்றான் வானம்பாடி. 'கவிதை வானில் பறக்க வேண்டிய நீங்கள் தரையில் நடப்பதும் அவசியம் ஆகிறது' என்றேன் நான். 'நீங்கள் தந்த உருவகத்திற்கு மிக்க நன்றி' என்றார். 'உங்கள் கவிதை வெற்றி பெறாது' என்றேன். 'ஏன்?' "இரவல்' & 4 எது?” 'கருத்து' 'எந்தக் கருத்து?” 'கண்ணா முச்சுப் பற்றியது” 'அது வெறும் உருவகம் தானே' "அதை நீங்களே உருவாக்கி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதற்கு உருவகம் என்று பெயர். கவிதை எழுதும் பொழுது உங்களுக்கு அது தோன்றி இருக்க வேண்டும். அதுதான் கலைப்படைப்பு. இது வெறும் சமையல்' என்றேன். அவர்களும் உங்கள் தலைப்பை எடுத்துக் கொண்டார்கள். 'அதனால்தான் அவர்கள் வெற்றி பெறுவது இல்லை' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/36&oldid=914540" இலிருந்து மீள்விக்கப்பட்டது