உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 37 [3] "விமரிசனம் வேறு, படைப்பு வேறு' என்ற எண்ணத்தில் எனக்குத் தெளிவு ஏற்பட்டது. படைப்பை விட விமரிசனம் தான் அதிகமாக இருக்கிறது. கட்டின வீட்டுக்குக் கவி சொல்லுகிறவர்கள் மிகுதி. கவி சொல்கிறவர். களா கலி சொல்கிறவர்களா எது சரி தெரியவில்லை. படைப்போ மிகவும் குறைந்துவிட்டது என்ற எண்ணம் தான் எனக்குத் தோன்றியது. அதைத்தான் இன்று எல்லோரும் பேசுகிறார்கள். நாட்டில் விமரிசனமே அரசியல் என்ற அளவுக்கு அரசியல் தாழ்ந்துவிட்டது. அதுவும் பழமையைப் பற்றிய விமர் சனமே அரசியல்; என்ன பயன்? விமர்சனங்களைத் தான் விசாரணைகள் என்று வடிவம் கொடுக்கிறார்கள். நல்லது வாழ வேண்டும் கெட்டது ஒழிய வேண்டும்; இதுதான் இலக்கியத்தின் அடிப்படை. ஆனால் எது நல்லது எது தீயது என்று அடுக்கிக் கூறுவது இலக்கியம் ஆகாது. அது வெறும் அட்டவணை தான். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இலக்கிய விமரி சனத்தை அரசியல் விசாரணையோடு ஒத்திட்டுப் பார்ப்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. விமரிசனம் வேண்டும் தான். அதோடு இலக்கியம் நிற்பது நல்லது அல்ல. வாழ்க் கைக்கு எது நல்லது என்று காட்ட வேண்டும். அதைப் படைத்துத் தர வேண்டும். அரசியல் இன்னும் இந்த அடிப் படையில் இயங்கவில்லை என்பதை உணர முடிந்தது. பழைய இலக்கியங்களின் விமரிசனம் காலட்சேபம் போன்றது. வீண் பொழுது போக்குகள். இன்றைய இலக்கி யத்தைப் பற்றி விமரிசனம் செய்யட்டும். அது வரவேற்கத் தக்கதுதான். புதிய படைப்புகளில் பிழைகள் செய்யாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/38&oldid=914542" இலிருந்து மீள்விக்கப்பட்டது