உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சரவணனுக்கு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சத்தத்தில், வீட்டுக்குள் ஏற்பட்ட சத்தம் கேட்கவில்லை. வீட்டில் ஏற்பட்ட சில்லறை ரகளையில், எக்ஸ்பிரஸ் பஸ் இந்நேரம் அலுவலகமே போயிருக்கும். இந்த மாதிரி சமயத்தில்தான், அவன் ஸ்கூட்டரை எடுப்பான். அலுவலகத்திற்கு, தாமதமாய்ப் போனாலும், அவனை யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை. அவன், அதன் மகுடதாரி. அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீஸர் எனப்படும் நிர்வாக அதிகாரிகூட ஓரிரு தடவை "சார் நீங்க. கெஜட்டட் ஆபீஸர். உங்க அந்தஸ்துல இருக்குற அதிகாரிங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்துல வரணுமுன்னு ஆபீஸ் விதி கிடையாது. ஆனா நீங்க என்னடான்னா ஆபீஸ் டைமுக்கு முன்னாலேயே வந்துடுறீங்க.." என்றார். உடனே இவன் கெஜட்டட் ஆபீசருக்கு நேரம் கிடையாதுன்னு ரூல்ஸ்ல சொல்றது எதுக்குன்னா, அவங்க ஆபீஸ் நேரத்துக்கு முன்னாலயும், பின்னாலயும்கூட வேலை பார்க்கணுமுன்னு அர்த்தப் படுத்திக்கனுமே தவிர, இதுக்கு இடையில், எப்போது வேணுமுன்னாலும் வரலாமுன்னு அர்த்தப் படுத்திக்கக் கூடாது." என்று சுவையாவும், சுடச்சுடவும் சொன்னவன்.

எப்படியாவது, வழக்கம் போல் பத்து மணிக்கு முன்பாகவே அலுவலகம் போய்விட வேண்டும் என்ற அவசர ஆவலில், அவன் ஆக்ஸிலேட்டரை அழுத்த ஸ்கூட்டர் ஆவேசமாகியது. அவன் மனமும் அதே மாதிரிதான். -

அவனைப் பொறுத்த அளவில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமான அண்ணன், அவனுக்குத் தந்தை. அண்ணி தங்கம்மா இரண்டாவது தாய். அம்மா. அண்ணியைச் சாடியது. அவளை இரண்டாந்தரத் தாயாக அவனுக்குக் காட்டியது. இப்படிப் பேச எப்படி மனம் வரும்? இவளா என்னைப் பெற்றாள்? அப்பா, அவன் நினைவுக்கு வராத வயதிலேயே காலமாகிவிட்டாராம். ஊரில், வயதான கிழடுகளை வழியனுப்பப் பாரதம் படித்தும், கல்யாண வீடுகளில் கொழுந்தி கொழுந்தி - நாவல் கொழிந்தியபடி என்று வாழ்த்துப் பாடியும். அம்மன் கொடைகளில் வரி பிரித்து அவற்றை நடத்திக் காட்டியும், அக்கம் பக்கத்து அடிதடி சண்டைகளில் நடுநிலை மாறாத வழக்காளியாகவும் இருந்தவர் அண்ணன். அவரது பாட்டைக் கேட்டுத்தான். அவனுக்குத்