8 வேரில் பழுத்த பலா
தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. அவர் வழக்குப் பேசும் நேர்மையைக் கண்டுதான் அவனுக்குள் தர்மம் உதித்தது. சின்ன வயதில், யாரிடமோ சின்னப் பொய் சொன்னதற்காக, ஒருவர். "வழக்காளி. மணிமுத்தோட தம்பியாடா நீ? ஒனக்காடா வாயில பொய் வருது?" என்று கண்டித்தது நினைவுக்கு வந்தது.
அப்படிப்பட்ட அண்ணன்தான், கொஞ்ச நஞ்சமிருந்த நிலத்தில் அன்றாடம் படாத பாடுபட்டு, குடும்பத்தைக் காப்பாற்றினார். கல்யாணமாகி ஏழெட்டு வருடமாகியும், குழந்தை பிறக்காதபோது, அம்மா உட்பட, அண்ணியின் மெளன சம்மதத்தோடு, பலர் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளச் சொன்னபோது, "எனக்கு. ரெண்டு தாய் இருக்காங்க ஒரு மகனும் மகளும் இருக்காங்க. யாருவே. எனக்கு குழந்தையில்லைன்னு சொல்றது" என்று எதிர்வாதம் பேசி, சீதையை காட்டுக்கு அனுப்பாத ராமபிரான்.
அண்ணி மட்டும் என்னவாம். அண்ணனுடைய 'பாரதப் படிப்பிற்காகவும், வழக்காளி' என்ற செல்வாக்கிற்காகவும், வசதியான குடும்பம் வலியக் கொடுக்க, வந்தவள். அவளோட அம்மா, அப்பா, எவ்வளவோ தூண்டிப் பார்த்தும், தனிக்குடித்தனத்திற்கு இணங்காதவள். அதற்காகவே, தாய் வீட்டிற்குப் போவதைக் குறைத்துக் கொண்டவள். அண்ணியோடு, அவன் அவர்கள் வீட்டுக்குப் போகும்போது, அந்த அத்தை, அண்ணியிடம், "புருஷனைக் கூட்டிக்கிட்டு இங்கே வாடி. அந்த சனியங்க வாடை வேண்டாம், நாங்க. ஒனக்கு தனியாய் வீடுகட்டி, ஒன் புருஷனுக்கு ஒரு பலசரக்குக் கடையும் வச்சுக் கொடுக்கோம்" என்று சரவணன் காதுபடவே பல தடவை சொல்லியிருக்காள். ஒருவேளை சரவணன் தன் அம்மாவிடம் சொல்லி, அப்படியாவது வீடு இரண்டுபடட்டும் என்பது போல் நினைத்தார்களோ என்னவோ.. அப்போதெல்லாம், அண்ணி, தன் அம்மாவுக்குக் காது கொடுக்க மறுத்தாள். சரவணனும், தன் அம்மாவிடம், அண்ணியின் தாய் வீட்டில் அங்கே தின்ற விதங்களைத்தான் சொல்லியிருக்கிறானே தவிர, திட்டிய விதங்களைச் சொன்னதில்லை. அது மட்டுமா?.
பட்டறைச் சட்டம் போல் இருந்த அண்ணன், பாரதம் படிக்கத் தேவையில்லாமல், எட்டாண்டுகளுக்கு முன்பு, பனைமரத்தில் நொங்கு வெட்டஅதுவும் தனக்காகப் பனையில் ஏறி, அவன் கண்முன்னாலேயே கீழே விழுந்து, துள்ளத் துடிக்கச் செத்தார். அப்போது அம்மாகூட. அவனை "பாவிப்பய மவனே. நீ ஏன் என் கண்மணி கிட்டே நொங்கு கேட்டே? நீ நொங்கு சாப்புடுறதுக்காகப் போனவனை சாவு சாப்பிட்டுட்டே"ன்னு மூன்று நாள் சேர்ந்தார் போல் விளக்குமாறு.