சு. சமுத்திரம் 9
செருப்பு: கை போன்ற பல்வேறு ஆயுதங்களால் அவனை அடித்தாள். அப்போதெல்லாம். அம்மாவைத் தடுத்து "தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளையை அடிக்கப்படாது' என்று அந்த ஆற்றாமையிலும், அவனுக்கு ஆறுதலாக வந்தவள் அண்ணி,
ஒரு மாதம் கழித்து "ஒனக்கு. பிள்ளையா குட்டியா? இந்த சொத்துகூட நமக்கு வேண்டாம். நம்ம வீட்டுக்கு வா" என்று பெற்றோர் சொன்னபோது, அவர்களைப் பிரிந்தோராய் கருதியவள் அண்ணி. எஸ்.எஸ்.எல்.ஸியுடன், தனது படிப்பை ஏர்க் கட்டிவிட்டு, அவள், அண்ணனுக்குப் பதிலாய் ஏரைப் பிடிக்கப் போனபோது, அதை அம்மா அங்கீகரித்தபோது, தடுத்தவள். அவன் கல்லூரியில் படிப்பதற்காக, தனது தங்க நகைகளை விற்றவள். அவனை மட்டுமல்ல. இப்போ கிசு கிசு படிக்கும் இந்த பி.காம். காரியை, அம்மா வயல் வேலைக்குத் துரத்தியபோது, அவளைப் பள்ளிக்குத் துரத்திவிட்டு, ஆண்பிள்ளை போல், வயல்வேலைகளைப் பார்த்தவள். ஆண்பிள்ளை இல்லாத நிலத்தை ஆக்கிரமிக்க, சில வீராதி வீரர்கள், வில்லங்க ஆயுதங்களோடு வந்தபோது, அவர்களை நேருக்கு நேராய் நின்று வாதாடி, ஊரில் வாதிட்டு, நிலத்தின் எல்லைகளைக் காத்தவள்.
இந்த சரவணனுக்கு, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம், எடுத்த எடுப்பிலேயே கிளாஸ் ஒன் ஆபிஸர் வேலை கிடைத்தபோது "இந்தா பாருப்பா சரவணா. ஆபிஸருங்களுக்கு சம்பளம், சிகரெட்டுக்கு. கிம்பளம், வீட்டுக்குன்னு ஆகிப் போயிட்டதாப் பேசுறாங்க. நீ இன்னார் தம்பி. நியாயம் தவறமாட்டார்னு பேர் வாங்கணும். சப்-ரிஜிஸ்டார். பத்திரத்துக்கு நூறு ரூபாய் வாங்குறது மாதிரியோ, சப் இன்ஸ்பெக்டர் கொலைக்கு ஆயிரம் ரூபாய் வாங்குறது மாதிரியோ வாங்கப்படாது. அப்படி எப்பவாவது ஒனக்கு சலனம் வந்தால், ஆயிரம் வழக்குலயும், அரை டம்ளர் டி கூடக் குடிக்காத அண்ணனோட கையும் அந்தக் கையால் அண்ணிக்கு அவர் கட்டுன தாலியும் இந்த படிப்புலயும், வேலையிலயும் விழுந்திருக்குமுன்னு நினைக்கணும். அப்போதான் நீ கீழே விழமாட்டே" என்று ஒன்னை படிக்க வச்சேன் பார் மார்தட்டும் பாணியில் சொல்லாமல், "ஒன் அண்ணன் மூலம் எனக்கு ஒரு குழந்தை இருந்தால் எப்படி இருக்குமோ, அந்தக் குழந்தையாய் ஒன்னைப் பார்க்கேன் என்று சொல்லாமல் சொன்னவள்.
அந்த அண்ணியின் முகதரிசனம் முழுமையாய் கிடைக்க வேண்டும் என்ற பாசத்தோடு, குடும்பப் பொறுப்போடும். டில்லியில் இருந்து பதவியுயர்வில் மாற்றலாகி வந்த மறுமாதமே. அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பு, தனியாக வீடு எடுத்து, அவர்களைக் கொண்டு