12 வேரில் பழுத்த பலா
காவலர், இப்போதாவது, தன்னைக் கவனிப்பார் என்று. சரவணன் அவரைப் பார்த்தான். அவரோ, கண்மண் தெரியாமல் ஓடிய ஒரு மண்லாரியைப் பார்த்து விசிலடித்தார். அது பெப்பே காட்டியபடி ஓடியது. பாவம். அவரால் நம்பரைக்கூட நோட் செய்ய முடியவில்லை. டயரியை எடுக்கப்போனால், அதற்குள் இருந்த சிங்க நோட்டுக்கள் கீழே விழுந்தன. அவற்றைப் பொறுக்கவே, அவருக்கு நேரம் சரியாக இருந்தது. சரவணன், பழையபடி அவரைப் பார்த்தான். அதற்குள் ஒரு சைக்கிள், ஒருவழிப்பாதையில் வரவில்லையானாலும், அதற்கு மட்டுமே ஒரு பாதை வேண்டும். டபுள்ளிலில் வரலாம். அதுக்காக ஒரு பெரிய குடும்பமே வருவதா? அவர்தான் விடுவதா? பழையபடியும் டயரிக்கும் அச்சடித்த காகிதத்துக்கும் போர். இரண்டாவது ரவுண்டிலும் சிங்கக் காகிதம் ஜெயித்தது.
சரவணனுக்கு அலுவலக நினைவு வந்தது. அவரை படபடப்பாய்ப் பார்த்தான்.
"ஸார். மிஸ்டர். ஒங்களைத்தான். முதலில் என்னை அனுப்புங்க." போலீஸ்காரர். அப்போதுதான் அவன்மீது சிரத்தை எடுத்து வந்தார். "நான் செய்த தப்பு என்ன லார்?" "யெல்லோ லைனை கிராஸ் பண்ணிட்டு, என்னையும் கிராஸ் பண்lங்களா?"
"அப்போ ஒரு கார் போச்சுதே. அதை சல்யூட்டோட விட்டிங்க." "யெல்லோ லைனை மட்டுந்தான் கார் கிராஸ் செய்தது. ஓங்க ஸ்கூட்டர்ல. பல்ப்ல. கருப்பு பெயிண்ட் இல்ல. அதுக்குத்தான் சார்ஜ் பண்ணப் போறேன்.
"அது ராத்திரிலதானே எப்படி எரியுதுன்னு தெரியும்." "ஒங்களுக்கு அப்படியா? எனக்கோ எப்பவும் தெரியும். நான் பகலில் பார்த்தால் தான். நீங்க ராத்திரிக்குள்ளே மாத்திடுவீங்க."
"அப்படியா. இப்போ நான் சீக்கிரமாய் ஆபீஸ். போகணும். என்ன செய்யணுமுன்னு சொல்றீங்களா?
"ஓங்க கண்ணாலயே பார்க்கிறீங்க... என்கிட்டே கேட்டால்? போலீஸ்காரன் வாயால் கேட்கமாட்டான்."
"அப்படியா இந்த சரவணன் கேஸலக்குப் போவானே தவிர. கேஷவிக்கு போகமாட்டான். உம். எழுதுறதை எழுதிட்டு, மெமோ கொடுங்க. எப்போ கோர்ட்டுக்கு வரணுமோ. அப்போ வாரேன். ஏன் யோசிக்கிறீங்க? என் பெயர் சரவணன்.