16 வேரில் பழுத்த பலா
ஒய்புக்கு இப்போ. எப்டி இருக்குது" என்றான். உடனே அவர் தேவல ஸார்." என்றார்.
"அதற்காக நீங்க கேர்லஸ்ா இருக்கப்படாது. இன்னைக்கு வேணுமுன்னாலும் நேற்றுப் போனது மாதிரி முன்னாலேயே போங்க. ஐ டோன்ட் மைண்ட்."
"தேங்க் யூ ஸார்." சரவணன் உள்ளே போய்க் கொண்டிருந்தான். தலைமைக் கிளார்க் பத்மா, மனைவியை மதிக்காத ராமச்சத்திரனை ஒரு மாதிரியாகப் பார்த்து புன்னகைத்தாள். பிறகு, அந்த இருவரும் சரவணனின் முதுகைப் பார்த்து எள்ளலாகச் சிரித்தார்கள். "ஒய்புக்கு. உடம்புக்கு உடம்புக்குன்னு சொல்லிச் சொல்லி அப்படி ஆயிடப் போகுது. என்று கிசுகிசுத்த அந்தப் பெண்ணிடம் "கத்திரிக்காய்னு சொல்றதால பத்தியம் போயிடாது. சினிமாவுக்குப் போறேன்னா இந்தக் குரங்கு விடுமா?" என்றான். உடனே சிரிப்பு. அப்புறம் கிசுகிசு, இறுதியில், நிர்வாக அதிகாரி செளரிராஜனின் காதை இரண்டு பேரும் ஊதினார்கள் - மாறி மாறி.
டெஸ்பாட்ச் அன்னம், அவர்கள் இருவரும் சரவணனுக்குப் பின்னால் சிரிப்பதைப் பார்த்தாள். ஆனால் ஆச்சரியப்படவில்ல. இன்னைக்கு இது என்ன புதுசா? நாளைக்கு இந்த பத்மாவும் என் ஹஸ்பெண்டுக்கு நெஞ்சுவலி ஸார் என்பாள். பெர்மிஷன் கிடைத்த நெஞ்ச நிறைவோடு முந்தானை முடிச்சுக்கு புருஷன் இல்லாமல். தனியாகவோ. டபுளாகவோ. போவாள். மறுநாள் இந்த சரவணன். இதே மாதிரி கேட்பார். இவர்களும், இதே மாதிரி சிரிப்பார்கள்.
அன்னத்திற்கு, அவன்மேல் லேசாக இரக்கம் ஏற்பட்டது. நல்லா இருக்குதே. நான் எதுக்குய்யா ஒனக்காக வருத்தப்படனும். பெரிய ஆபீஸராம் ஆபீஸர். கீழே இருக்கிறவங்கள்ல யார் யார் எப்டி எப்டின்னு தெரிய விரும்பாத ஆபீஸர். ஒனக்கு வேணுய்யா. எனக்குத்தான் 'மெமோ கொடுக்கத் தெரியும். அந்த மெமோவால என்னோட வேலை எவ்வளவு பாதிக்கப் போகுதுன்னு நினைச்சுப் பாத்தியா. இவ்வளவுக்கும் இந்த ஆபீஸ்ல நான் ஒருத்திதான் ஒன்ன பின்னால் திட்டாதவள். புறம் பேசாதவள். எனக்கு மெமோ. அதோ குலுங்கிச் சிரிக்கிற அவளுக்கு இன்கிரிமென்ட் சிபாரிசு. போய்யா. போ.
அன்னம், அதற்குமேல் யோசிக்கப் பயந்து விட்டாள் அவள் இப்படி சிந்திப்பது கூட அவர்களுக்கும் உள்ளே இருக்கிற சரவணனுக்கும் தெரிந்து, கிடைக்காமல் கிடைத்த இந்த வேலை