24 வேரில் பழுத்த பலா
"என் கேள்வி. எந்த செக்ஷனையாவது கொடுத்தீங்களா என்கிறதுதான்."
"கொடுக்கலே ஸார். விஷப் பரிட்சை நடத்த முடியுமா? முயலைப் பிடிக்கிற நாயை மூஞ்சைப் பார்த்தாலே தெரியுமே."
“ஸோ... அதனால. அந்தப் பெண்ணுக்கு விஷத்தைக் கொடுத்திட்டிங்க முயலைத் துரத்துவது மாதிரி அவளைத் துரத்துlங்க. தண்ணீருக்குள் பார்க்காமலே. அவளுக்கு நீச்சல் தெரியாதுன்னு ஒரு முடிவுக்கு வந்திட்டிங்க.."
"ஸார். ஸார். ரொம்ப இன்ஸல்டிங்காய்."
"நான் பேசுறது இன்ஸ்ல்டுன்னால், நீங்க செய்தது மானக் கொலை. எஸ்.எஸ்.எல்.சி. படித்த ஒரு சந்தானத்தை எப்படியோ வேலையிலே சேர்த்து, அக்கெளண்ட்ஸைக் கவனிக்கச் சொல்லலாம். அவரு இருக்கிற கிளார்க் வேலையை ஸ்டாப் செலக்ஷன் கமிஷனுக்கு முறைப்படித் தெரியப்படுத்தாமல், சட்டவிரோதமாய் இருக்கலாம். அப்புறம் நாலைஞ்சு வருஷத்துக்குப் பிறகு. அந்த சட்ட விரோதத்தையே ஆதாரமாக்கி. சட்டப்படி அவரை நிரந்தரமாக்கலாம். அதே சமயம். ஒரு கிராஜுவேட் பெண். கமிஷன்ல பரீட்சை எழுதி பாஸாகி, இண்டர்வியூவில் தேறி. யு.டி.ஸி.யாய் வாராள். அவளுக்கு விசாரணை இல்லாமலே தீர்ப்பளிச்சு, சமஸ்கிருத மந்திரம் மாதிரி சட்டதிட்டங்களை மறைச்சு, அவளை கன்டெம்ட் செய்து டெஸ்பாட்ச்லே போட்டுடலாம். ஏன்னா. சந்தானம் பட்டா போட்டு வேலைக்கு பரம்பரையாய் வாரவரு. அன்னம் கோட்டாவுல வந்தவள். அப்படித்தானே ஸார்.?"
"லார் ரொம்ப இன்சல்டிங்கா."
"ஓங்ககிட்ட வேற எப்படிப் பேசுறது? ஒங்களுக்கு ஹரிஜனப் பெண்ணுன்னால், ஒன்றும் தெரியாதுன்னு நினைக்கிற சட்டவிரோத சமூக விரோத சிந்தனை, ஆல்ரைட்.. நான் சந்தானத்தையும் காப்பாத்துவேன். அன்னத்தோட அபிவியல் நிலையையும் காப்பாற்றணும். சந்தானத்தை டெஸ்பாட்ச் செக்ஷன்லே போடுங்க. ஆபீஸ் ஆர்டர் போட்டாகணும். அன்னம் நேட்டிவ் இண்டலிஜெண்ட் கேர்ல. படித்த ஹரிஜனங்களோட திறமை, வெட்டியெடுக்கப்படாத தங்கம் மாதிரி. தூசி படிந்த கண்ணாடி மாதிரி. நாம் தங்கத்தை வெட்டியெடுக்கணும். ஏதோ ஒரு பித்தளை இருக்குதுன்னு தங்கத்தை புதைச்சுடப் படாது. கண்ணாடியைத் துடைச்சுப் பார்க்கணும். கைக் கண்ணாடி போதுமுன்னு, அதை உடைச்சுடப் படாது. இந்த மாதிரி வேற ஏதும் கோளாறு இருக்குதா..?
"இல்ல ஸார். அன்னம் கோளாறுதான்."