உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 33

உமா இடைமறித்தாள். "ஸார். ஏ.ஓ சொல்றது. எனக்கும் சேர்த்துச் சொல்றது மாதிரி." ஏ.ஓ. கோபப்பட்டார். "என்னம்மா. நீ ஒனக்கு வேணுமுன்னால். நீ தனியாய்ச் சொல்லு." "எனக்கு நாக்கு." சரவணன், கடுமையாகச் சொன்னான்: "நம்ம பிரச்சினை நாக்குப் பிரச்சினையல்ல. லஞ்சப் பிரச்சினை. உண்மை எப்போதாவது தெரியத்தான் செய்யும்."

செளரி உபதேசிக்கலானார். "அதைத்தான் ஸார் நான் சொல்ல வந்தேன். பத்து வருஷத்துக்கு முன்னால. இதே ஆபீஸ்ல அக்கெளண்டண்டாய் இருந்தேன். அப்புறம் இப்போ அஞ்சு வருஷமாய் நிர்வாக அதிகாரியாய் இருக்கேன். இந்த அனுபவத்துல சொல்றேன் கேளுங்கோ. கெடுவான் கேடு நினைப்பான். நீங்க ஏன் இதுக்குப்போய் கவலைப்படுறீங்க? பிச்சு உதறிப்படலாம். செளமிப் பயல் கண்ணுல, விரலை விட்டு ஆட்டிடலாம். செங்கோலுக்கு முன்னால சங்கீதமா? கொடுங்க ஸார் லெட்டரை... என்ன நினைச்சுக்கிட்டான்? கொடுங்க ஸார். அதுவும் ஒங்களைப்போய் லஞ்சம் வாங்குறவர்னு சொல்லியிருக்கான் பாருங்க... இதுக்கே அவன் கம்பெனியை பிளாக் லிஸ்ட் செய்திடலாம். இன்னைக்கே ஒடி போட்டு. அவனோட பழைய சமாச்சாரங்களை கிளார்க்குகளை வச்சு கிளறிக் காட்டுறேன் பாருங்கோ."

"மன்னிக்கணும். இனிமேல் இந்த விவகாரத்தை, நான் மட்டும் கவனிக்கிறேன். எனக்கு, அந்தக் கம்பெனி சம்பந்தப்பட்ட எல்லா ரிஜிஸ்டர்களையும் அனுப்புங்க... மிஸ். உமா பீரோ சாவியை கொடுங்கோ. நானே வச்சிக்கிறேன்."

செளரிராஜன் முகத்தில் பேயறைந்தது. உமா முகத்தில் பிசாசு அறைந்தது. இந்த இரண்டுமே நான் தான் என்பதுபோல் அக்கெளன்டன்ட் ராமச்சந்திரன், அசையாமல் இருந்தார். சரவணன், வேறு வேலைகளைக் கவனிக்கத் துவங்கியதால், அந்த மும்மூர்த்திகளும் வெளியேறினார்கள்.

அரை மணி நேரமாகியும், செளநா கம்பெனி சம்பந்தப்பட்ட எந்த ரிஜிஸ்டரும் வரவில்லை. சரவணன், எழுந்து. கதவு முனையில் தலை வைத்தபடியே, "மிஸ்டர் செளரி, இன்னுமா ரிஜிஸ்டருங்க கிடைக்கல?" என்றான். திரும்பப் போய் உட்கார்ந்தான்.