பயனர்:மழயிசை

விக்கிமூலம் இலிருந்து

மழயிசை என்னும் முனைவர் சி.சங்கீதா, விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவிலில் உள்ள கலசலிங்கம் கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிகிறார். இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் சங்கக் கவிதையாக்கத்தில் உரிச்சொற்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்டத்தை நிறைவு செய்துள்ளார். இவர் பல்வேறு கருத்தரங்குகள், மாநாடுகள், இதழ்களில் 28 ஆய்வுக்கட்டுரைகளையும் அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் திராவிட இயக்கச் சிந்தனைகள் என்ற ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்றுத் தொல்காப்பியமும் திருக்குறள் கற்பியலும் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கியுள்ளார். மழயிசை என்ற புனைப்பெயரில் தொல்காப்பியப் பெயர்த்தி என்ற கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார்.தொல்காப்பியப் பெயர்த்தி கவிதை நூலிற்கு தேனி முற்போக்குக் கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் விருது மற்றும் கரூர் பெருந்தமிழாய்வுச் சங்கமத்தின் செந்தமிழ்ச் சிற்பி விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றதோடு அவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மழயிசை என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதி வரும் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்புப் பொழிவையும் நிகழ்த்தியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:மழயிசை&oldid=1392048" இலிருந்து மீள்விக்கப்பட்டது