பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) அமலா தி த் யன் 109 கெள, கேள. வேண்டும். இவரை எங்கேயாவது கொண்டுபோய்ச் சேர்ப் பிக்கின்றேன்; இவரைக் கொன்ற பழிக்குத் தக்கபடி நான் சமாதானம் சொல்கின்றேன். ஆகவே நான் வருகின்றேன் அம்மணி. நான் குருசன யிருக்க வேண்டும், பட்சம் பாராட் டும் பொருட்டு. இங்கனம் கெடுதி ஆரம்பிக்கின்றது. இன் லும் கெடுதி பின்னே இருக்கின்றது. என் அம்மணி, இன் லும் ஒரு வார்த்தை. நான் என்ன செய்யவேண்டும் ? இப்பொழுது செய்யும்படி கேட்கின்றேனே. அதை மாத்தி ாம் எப்பொழுதும் செய்யாதீர்! இந்த மதம் பிடித்த மன் னன் சயனக் கிருகத்திற்கு, உமது மதியை மயக்கி, மறுபடி யும் அழைத்துப் போகவிடும்; தனது கிள்ளையென வழைத் து உமது கன்ன்த்தைக் கிள்ளவிடும் , தனது ஊத்தை நா ஆறும் வாயால் இரண்டு முத்தம் கொடுத்து அல்லது தன் காதகக் காத்தால் கழுத்தில் நெருடி, நான் பயித்தியக்கார னைப்போல் பாசாங்கு செய்கிறேனே யொழிய, வாஸ்தவத் தில் பயித்தியம் பிடித்தவ னல்ல வென்பதை ಎJu6TLDT யறி யட்டும் உம்மிட மிருந்து. தாங்கள் இதை யெல்லாம் அவர் அறியும்படி சொல்வது மிகவும் நலமாம். இப்படிப்பட்ட இரகசியமான விஷயங்களை, புத்தி விசாலமும் பொறுமை யும் பேரழகும் வாய்ந்த எந்த ராணி யொருத்தி ஒரு மந்தி யிடமாவது, மண்கேத் திடமாவது, கண்பூெனே யிடமாவது மறைத்து வைப்பாள் யார் அப்படிச் செய்வார்கள் ? வேண்டாம், மானமும் மரியாதையும் கிடக்கட்டும்; கூரை யின்பேரில் கூண்டை எடுத்துக்கொண்டுபோய் வைத்துப் பட்சிகளைத் திறந்து பறக்கவிட்டு, தானும் பறக்க வெண் ணித் தலையை நுழைத்து, கழுத்தை முறித்துக்கொண்ட கருங்குரங்கினைப்போல், நீரும் சங்கதியை வெளியிட்டுக் சாகும். வார்த்தைகள் சுவாசத்தா லாகி, சுவாசமே உயிர் நிலையாவ தானுலும், .ே சொன்னதை உச்சரிக்க எனக் குயி ரில்லை யென்று உறுதியாய் நம்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/115&oldid=725108" இலிருந்து மீள்விக்கப்பட்டது