பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2.) அ ம லா தி க்ய ன் 87 செய்யவேண்டுமென காம் கோருகிற ஒர் விஷயம், அக்கோ பம் ஆறியவுடன், அக் கோரிக்கையும் இழக்கின்றது ; யா தொரு சந்தோஷமோ துக்கமோ, அதன் கொடுமையினவே யே அது சம்ஹரிக்கப்படுகின்றது. சந்தோஷம் அதிகமா யிருக்குமிடத்து துக்கமும் அதிகமாய்ப் பாராட்டப்படுகின் றது. அற்ப விஷயங்களிளெல்லாம், துக்கம் சந்தோஷமடை கிறது, சந்தோஷம் துக்கமடைகிறது. இவ்வுலகமானது என் அறும் கிலேயானதன்று. ஆகவே, நமது ஆசையும் தமது அ.கி ர்ஷ்டத்துடன் மாறுவது ஆச்சரியகரமன்று. ஏனெனில் ஆசையானது அதிர்ஷ்டத்தைப் பின் தொடருகின்றதோ, அல்லது அதிர்ஷ்டமானது ஆசையைப் பின் தொடருகின் தகோ, என்னும் கேள்வி, கேவலம் மனிதரால் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. சம்பத்துடையான் ஒருவன் அதனே இழப்பானுயின் அவனது சகல நண்பர்களும் அவனே விட் டுப் பறந்தோடிகின்றனர் என்பதை காண்பாய். வறிஞன் ஒருவன் செல்வமுடையவ ஞயின், அவனது விரோதிகளும் அவனுக்கு நண்பர்களாகின்றனர் விரைவினில், ஆகவே இவ் வாறு ஆசையானது அதிர்ஷ்டத்தைப் பொறுத்த தாகின் றது. குறையொன்று மில்லாருக்குச் சிநேகிதர்கள் குறை வில்லை, கேடுற்றக்கால் கிளைஞரை காடுபவன், உடனே அவர் களைத் துவேஷிகளாக மாற்றுகிருன். ஆகவே ஒழுங்காய் நான் ஆரம்பித்த இடத்தில் முடிக்கு மிடத்து, அன்னவர் கூறி யிருக்கிறபடி நாம் எண்ணுவ தோர் விதம், ஈசன் எழுதிய தோர் விதமாய் முடிகின்றது. ஆகவே காத்பர்யம் யாது ? நமது எண்ணங்களால் பயனில்லை , முதலில் யோசி ப்பது நம்முடைய தொழில், முடிவில் முடிப்பது அந்த ஈசன் தொழில். ஆகவே கற்காலம் இப்பொழுது நீ இரண் டாம் கணவனே கடிமணம் புரியமாட்டோமென்று கருது கிருய், முதல் கணவனுடன் அந்த எண்ணம் முழுவதும் மாண்டுபோகும் என்பதற்கு யாதொரு சந்தேகமு மில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/93&oldid=725266" இலிருந்து மீள்விக்கப்பட்டது