பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 73 மேடையில் நடித்து, நாடகத்தை முடிக்கும் ஒவ்வொரு ஆக்ட ருக்கும், நாடகம் முடிக்கவுடன் தன் தலையிலிருந்த ப்ெரும் பாாம் நீங்கியது போலத்தான் தோன்றும், என்பதிற்குச் சிறிதே னும் சந்தேகமில்லை. கடைசியாக ஒரு முக்கியமான் கஷ்டம் ஒன்றைச் சொல்ல மறந்தேன். வேஷம் போட்டுக் கொள்ளு வதற்கு ஒரு மணி சாவகாசமானுல் அதை அழிப்பதற்கு அர்ை மணி சாவகாசமாகும் சில சமயங்களில் கிருஷ்ணவேஷம் புத்தர் வேஷம் முதலிய வேஷம் கரிப்பவர்கள், ஏறக்குறைய உடல் முழுவதும் வர்ணம் தீட்டிக்கொள்ள வேண்டியிருந்தால், அந்த வர்ணமானது மறுநாள் காலை எண்ணெய் தேய்த்துக் கொண்டு ... ? ஸ்நாகம் செய்தால்தான் போகும்! களத்து அலுத்துப் போயிருக்கும் பொழுது வேஷத்தை அழிக்கவேண்டிய சமயத்தில் எத்தனையோ ஆக்டர்கள்' அப்பா! இனி இந்தத் தொல்லை வேண்டாம் மறுபடியும் நான் ரங்கத் தின் பேரில் ஏறுகிறேனு பார்’ என்று சொல்லியதைப் பன் முறை கேட்டிருக்கிறேன். எனக்கும் அவ்வண்ணம் பன்முறை தோன்றியிருக்கிறது. ஆயினும் மற்ற வைாாக்கியங்களைப்போல் இந்த வைராக்கியமும் இரண்டு மூன்று நாட்களுக்குள் மறைந்து போம். இப்படி மறப்பதற்கு மிகவும் அது குணமான விஷயங் களில் இந்த 'பகோ டா மீடிங்' ஒன்ரும் பட்ட கஷ்டங்களை யெல்லாம் மறந்து, வேடிக்கையாகப் பேசி, பகோடா சாப்பிட்டு விட்டு, சந்தோஷமடைந்தபின், 'உம்-அப்புறம்-பிறகு என்ன நாடகம் எடுத்துக்கொள்வோம்!”-என்று மெல்ல பேச ஆரம் பிப்பது வழக்கம்! அவ்வாறு எங்கள் முதல் பகோடா மீடிங்கி லும் கடைசியில் விட்டிற்குப் புறப்படுமுன் யாரோ ஒருவர். :பிறகு என்ன நாடகம் போடுவது?’ என்கிற கேள்விகேட்டார். மேற்சொன்ன இரண்டு நாடகங்களுள் சுந்தரி ' என் பது எங்கள் சுகுண விலாசசபையில் மறுபடியும் முழு நாட கமாக ஆடப்படவேயில்லை. ' புஷ்பவல்லி’யும் அப்படியே இதில் இரண்டு காட்சிகள் மாத்திரம் சபையின் நவராத்திரி கொண்டாட்டத்தில் ஒரு முறை பிறகு ஆடப்பட்டதென்பது என் ஞாபகம். ஆயினும் இவ்விாண்டு நாடகங்களும் பெங்க ரூரில் 1896 ம் வருஷம் ஸ்தாபிக்கப்பட்ட சுகுணவிலாச சபை யின் கிளைச் சபையிலும், இன்னும் இதர சபைகளிலும் சில முறை ஆடப்பட்டிருக்கின்றன. இருக்தம், கான் எழுதிய நாட கங்களுள் இவ்விரண்டும் மிகுந்த குறைவான தரம் ஆடப்பட்டன அநேக வருஷங்கள் பொறுத்தே அச்சிட்டேன்."சுந்தரி ஒன்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/78&oldid=727491" இலிருந்து மீள்விக்கப்பட்டது