பக்கம்:Siva Temple Architecture etc..pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

கோயில்களின் காலம் சுமார் கி. பி, 600 முதல் 1100 வரையில் என்று எண்ணப்படுகிறது.

இச் சில்பத்தின் முக்கிய அம்சங்கள் (1) சீன சில்பத்தில் இருப்பதுபோல் கூரை மேற்கூரைகள் (2) இக்கூரைகளில் பலகணிகள் (Dormer windows) அமைக்கப்பட்டிருக்கின்றன. (3) தூண்கள் ஐரோப்பிய (Doric) தூண்களைப் போன்றவை; இம்மூன்று குறிகளும் கிரேக்க சில்பத்தினின்றும் இத்தேசத்திற்கு வந்ததாக எண்ணப்படுகிறது. (4) மூன்று வளைவுகளையுடைய கமான்கள். (Three foiled arches).

இச் சில்பத்தின் முக்கியமான கோயில் இங்குள்ள மார்த்தாண்ட ஆலயமாம். இது 60 அடி நிகளம் 36 அடி அகலம் ; கிழக்கு நோக்கியுள்ளது ; மேற்குபுரம் இரண்டு கட்டடமுகங்கள் (facades) சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவைகளை சேர்த்து மொத்தம் அகலம் 60 அடி யாகிறது, இதன் உயரமும் 60 அடி இருந்திருக்கலாம் என்று கன்னிங்காம்துரை அனுமானிக்கிறார். இதன் கூரை முற்றிலும் அழிந்து போயிருக்கிறது. பெர்கூசன் துரை இதன் கூரை மரத்தால் ஆயிருக்கவேண்டுமென்று எண்ணுகிறார். இதன் சுற்றுப்பிராகாரம் 220 அடி x 142 அடி, கோயிலைச் சுற்றிலும் தண்ணீர் தேக்கப்பட்டதாக எண்ணுகிறார்கள். இது சூர்ய நாராயண விஷ்ணு ஆலயமா யிருந்தது. இது லலிதா முக்த பீடன் எனும் அரசனால் (725 - 760) கட்டப்பட்டது. சிகண்டர்ஷா (1393 - 1416) வினால் கோயிலும், ஸ்வாமியும் அழிக்கப்பட்டது.

இதற்கு மற்றொரு உதாரணம் வந்திபுரம் என்று தற்காலம் வழங்கப்படும் அவந்திபுரத்திலுள்ள சிவாலயமாம்; இது அவந்தி வர்மனால் (855 - 883) கட்டப்பட்டதாம்.

நேபாள கோயில் சில்பம்

இங்குள்ள இந்து ஆலயங்கள் பெரும்பாலும் மரத்தாலாயவை ; பெரும்பாலும் அடிபீடம் மாத்திரம் கல்லால் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயில்கள் ஒன்றின்மேலொன்றான பல கூரைகள் உடையவை; சீன கோயில்களைப் போன்றவை. இதற்கு உதாரணமாக பாட்கேவான், படான், பசுபதி, முதலிய இடங்களிலுள்ள கோயில்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/9&oldid=1288819" இலிருந்து மீள்விக்கப்பட்டது